உள்ளூர் செய்திகள்
முதல்வர் ஸ்டாலின்

நீட் தேர்வில் விலக்கு, புதிய மருத்துவ கல்லூரிகள்... மத்திய மந்திரியிடம் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை மனு

Published On 2022-01-12 12:07 GMT   |   Update On 2022-01-12 12:07 GMT
மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஏற்கனவே இருந்த நடைமுறையை அமல்படுத்த உத்தரவிடவேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.
சென்னை:

தமிழகத்தில் 4 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 11 மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். காணொலி நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா, தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை பிரதமரிடம் கோரிக்கை விடுத்தார். மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஏற்கனவே இருந்த நடைமுறையை அமல்படுத்த உத்தரவிடவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

மேலும், திறப்பு விழாவில் பங்கேற்ற மத்திய சுகாதாரத் துறை மந்திரி மன்சுக் மாண்டவியாவிடம் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை மனு அளித்தார்.

அதில், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகளை துவக்க வேண்டும், 6 புதிய மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் துவங்க அனுமதி வழங்க வேண்டும், கோவை எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளார் தமிழக முதல்வர்.
Tags:    

Similar News