செய்திகள்
அரியானா முதல்வர் கட்டார்

நீரஜ் சோப்ராவுக்கு அசத்தலான பரிசை அறிவித்த அரியானா முதல்வர்

Published On 2021-08-07 13:31 GMT   |   Update On 2021-08-07 13:31 GMT
பஞ்ச்குலாவில் விளையாட்டு வீரர்களுக்கான மையத்தை உருவாக்க உள்ளதாகவும், அங்கு நீரஜ் விரும்பினால் தலைவராக பதவி வகிக்கலாம் என்றும் அரியானா முதல்வர் கூறினார்.
சண்டிகர்:

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில், அரியானா மாநிலத்தைச் சேர்ந்த நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். ஒலிம்பிக்கில் 13 ஆண்டுகளுக்குப் பின்னர் தனி நபர் பிரிவில் இந்தியாவுக்கு தங்கம் கிடைத்துள்ளது. இந்த வெற்றியை நாடே கொண்டாடி வருகிறது.  தங்க மகன் நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துகள் குவிந்தவண்ணம் உள்ளன.

இந்நிலையில், தங்க மகன் நீரஜ் சோப்ராவுக்கு 6 கோடி ரூபாய் வெகுமதியுடன், அரசு வேலை வழங்கப்படும் என அரியானா முதல்வர் கட்டார் அறிவித்துள்ளார்.  

பஞ்ச்குலாவில் விளையாட்டு வீரர்களுக்கான மையத்தை உருவாக்க உள்ளோம். அங்கு நீரஜ் விரும்பினால் அவர் தலைவராக பதவி வகிக்கலாம், மற்ற வீரர்களைப் போல அவருக்கு 50 சதவீத சலுகையுடன் ஒரு வீடு வழங்கப்படும் என்றும் கட்டார் கூறி உள்ளார்.

Tags:    

Similar News