செய்திகள்
கோப்புப்படம்

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியில் மேலும் ஒரு வீரர் கொரோனாவால் பாதிப்பு

Published On 2020-11-22 01:21 GMT   |   Update On 2020-11-22 01:21 GMT
தென்ஆப்பிரிக்க அணியை சேர்ந்த மேலும் ஒரு வீரருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
கேப்டவுடன்:

மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்காக இங்கிலாந்து கிரிக்கெட் அணி, தென்ஆப்பிரிக்கா சென்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 27-ந் தேதி கேப்டவுனில் நடக்கிறது. இந்த போட்டி தொடருக்காக தயாராகி வரும் தென்ஆப்பிரிக்க அணி வீரர்கள், பயிற்சியாளர்கள், உதவியாளர்கள் என 50 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் ஒரு வீரருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கடந்த வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதனை அடுத்து அவரும், அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த இருவரும் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டனர். இந்த நிலையில் தென்ஆப்பிரிக்க அணியை சேர்ந்த மேலும் ஒரு வீரருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. அவரது பெயர் விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை. இதனால் நேற்று நடக்க இருந்த தென்ஆப்பிரிக்க அணியினருக்கு இடையிலான பயிற்சி ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இங்கிலாந்து வீரர்களுக்கு ஏற்கனவே நடத்தப்பட்ட பரிசோதனையில் எந்தவித பாதிப்பும் இல்லை என்பதால் அவர்கள் நேற்று தனியாக பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News