செய்திகள்
வானிலை நிலவரம்

சென்னை அருகே 470 கி.மீ. தொலைவில் புயல் சின்னம்

Published On 2020-11-24 02:20 GMT   |   Update On 2020-11-24 02:20 GMT
சென்னையில் இருந்து 470 கி.மீ. தொலைவில் நிவர் புயல் சின்னம் நிலை கொண்டுள்ளது.
சென்னை:

வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நிவர் புயலாக மாறி நாளை கரையை கடக்கிறது.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சென்னையில் இருந்து 470 கி.மீ. தொலைவில் நிவர் புயல் சின்னம் நிலை கொண்டுள்ளது.

புதுச்சேரியில் இருந்து 440 கி.மீ. தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மையம் நிலை கொண்டுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் வேகம் மணிக்கு 15 கி.மீ. வேகத்திலிருந்து 4 கி.மீ. ஆக குறைந்தது.

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் விரைவில் புயலாக மாறுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News