உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

நெல்லை விவசாயிகளுடன் முதல்-அமைச்சர் நாளை கலந்துரையாடுகிறார்

Published On 2022-04-15 10:16 GMT   |   Update On 2022-04-15 10:16 GMT
இலவச மின்சாரம் பெற்ற நெல்லை மாவட்ட விவசாயிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காணொலி காட்சி மூலம் கலந்துரையாடல் நடத்துகிறார்.
நெல்லை:

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பாக தமிழகம் முழுவதும் ஒரு ஆண்டில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் என்ற திட்டம் தொடங்கப்பட்டு மின்இணைப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில் மின்இணைப்பு பெற்ற ஒரு லட்சம் விவசாயிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் நாளை (சனிக்கிழமை) கலந்துரையாடுகிறார்.

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இலவச மின்சாரம் பெற்ற விவசாயிகள் முதல்&அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்காக வண்ணார்பேட்டை எப்.எக்ஸ்.பொறியியல் கல்லூரி, தென்காசி ஸ்ரீநல்லமணி யாதவா கல்லூரி மற்றும் சீதபற்பநல்லூர், வள்ளியூர், புளியங்குடி உள்ளிட்ட இடங்களில் உள்ள கல்லூரிகளிலும் ஏற்பாடுகள் செய்யப்-பட்டுள்ளது.

வண்ணார்பேட்டையில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்குகிறார். கலெக்டர் விஷ்ணு முன்னிலை வகிக்கிறார். நிகழ்ச்சியில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மின்சாரதுறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.
Tags:    

Similar News