ஆட்டோமொபைல்

இந்தியாவில் 2019 ஃபோர்டு எண்டேவர் கார் அறிமுகம்

Published On 2019-02-22 10:41 GMT   |   Update On 2019-02-22 10:41 GMT
ஃபோர்டு மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2019 எண்டேவர் எஸ்.யு.வி.யை அறிமுகம் செய்துள்ளது. #2019FordEndeavour



ஃபோர்டு நிறுவனம் இந்தியாவில் தனது 2019 எண்டேவர் எஸ்.யு.வி. காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய காரின் பேஸ் வேரியண்ட் விலை ரூ.28.19 லட்சம் என்றும் டாப் எண்ட் வேரியண்ட் விலை ரூ.32.97 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஃபோர்டு எண்டேவர் எஸ்.யு.வி. டைட்டாணியம் மற்றும் டைட்டாணியம் பிளஸ் என இருவித வேரியண்ட்களில் கிடைக்கிறது. முந்தைய டிரெண்ட் மாடல் தற்சமயம் நிறுத்தப்பட்டு விட்டசு. புதிய எண்டேவர் கார் 2.2 லிட்டர் மற்றும் 3.2 லிட்டர் என இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

பேஸ் மாடலான டைட்டாணியம் வேரியண்ட் 2.2 லிட்டர் என்ஜின் 158 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 385 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதன் 3.2 லிட்டர் யூனிட் 197 பி.ஹெச்.பி. மற்றும் 470 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜின் 6 ஸ்பீடு  ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது. 



புதிய மாடலில் முன்புற பம்பர், கிரில், முகப்பு விளக்கு உள்ளிட்ட அனைத்துமே மாற்றம் செய்யப்பட்டு கம்பீரமான தோற்றத்துடன் உருவாகி இருக்கிறது. இத்துடன் டயமண்ட் கட் பினிஷுடன் 18 அங்குல அலாய் சக்கரங்கள் வழங்கப்பட்டுள்ளன. உள்புறம் ஹேண்ட்ஸ்-ஃப்ரீ டெயில்கேட் அம்சம், புஷ் ஸ்டார்ட் / ஸ்டாப் வசதி வழங்கப்படுகிறது. 

மற்ற அம்சங்களை பொருத்தவரை ஹெச்.ஐ.டி. ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், ரெயின் சென்சிங் வைப்பர்கள், செமி பேரலெல் பார்க்கிங் அசிஸ்ட், பானரோமிக் சன்ரூஃப் மற்றும் ஆக்டிவ் நாய்ஸ் கான்செலேஷன் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 8.0 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட SYNC3 இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் 10-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News