செய்திகள்
ஆளுநருடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு (கோப்பு படம்)

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

Published On 2021-05-15 12:25 GMT   |   Update On 2021-05-15 12:25 GMT
தமிழகத்தில் 18 வயதில் இருந்து 45 வயது வரை உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கு ஏதுவாக 5 கோடி தடுப்பூசி வாங்க உலகளாவிய டெண்டர் விடப்பட்டுள்ளது.
சென்னை:

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம், நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் ஆளுநருடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தில் கொரோனாவால் தினசரி பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டி உள்ளது. மொத்த பாதிப்பு 15.3 லட்சமாக உள்ளது. சுமார் 2 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர். தமிழகத்தில் 18 வயதில் இருந்து 45 வயது வரை உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கு ஏதுவாக 5 கோடி தடுப்பூசி வாங்க உலகளாவிய டெண்டர் விடப்பட்டுள்ளது.

தமிழக அரசின் கொரோனா தடுப்பு பணிகளுக்காக உதவி செய்யும் வகையில் உலகெங்கும் உள்ள தமிழர்கள் தனியார் அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் மூலமாகவோ அல்லது நேரடியாக முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதி மூலமாகவோ நிவாரண உதவி வழங்க வேண்டும் என முதல்-அமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதையடுத்து பல்வேறு தரப்பினரும் முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தங்களால் முடிந்த தொகையை நிவாரணமாக வழங்கி வருகின்றனர்.
Tags:    

Similar News