தொழில்நுட்பம்
போக்கோ லோகோ

புதிய லோகோ அறிமுகம் செய்த போக்கோ இந்தியா

Published On 2021-02-19 08:57 GMT   |   Update On 2021-02-19 08:57 GMT
போக்கோ இந்தியா நிறுவனம் புதிய பிராண்டு லோகோவை அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


போக்கோ இந்தியா நிறுவனம் புதிய பிராண்ட் லோகோ மற்றும் மஸ்கோட் ஆகியவற்றை அறிமுகம் செய்தது. புது பிராண்ட் லோகோ குழப்பத்தை குறிக்கும் சின்னத்தை சார்ந்து உருவாக்கப்பட்டு உள்ளது. இது ஒவ்வொரு விஷயத்திலும் முற்றிலும் வித்தியாசமான மாற்றை தேடும் நபரை குறிக்கும் என போக்கோ இந்தியா தெரிவித்து இருக்கிறது. 

லோகோவுடன் அறிமுகம் செய்யப்பட்ட மஸ்கோட் பற்றியும் போக்கோ விளக்கம் அளித்து இருக்கிறது. 2018 ஆம் ஆண்டு போக்கோ சியோமியின் துணை பிராண்டாக அறிமுகமானது. பின் கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் போக்கோ தனி பிராண்டாக மாறியது.



சியோமி நிறுவனம் அதிக ஸ்மார்ட்போன்கள் மற்றும் பிளாக்ஷிப் மாடல்களை ஒவ்வொரு ஆண்டும் அறிமுகம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளது. போக்கோ நிறுவனம் குறைந்த எண்ணிக்கையில் சாதனங்களை அறிமுகம் செய்து வருகிறது. சமீபத்தில் போக்கோ எம்3 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யதது.

இதுதவிர போக்கோ பாப் பட்ஸ் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலுக்கான டீசரை வெளியிட்டு உள்ளது. மேலும் போக்கோ எப்2 ஸ்மார்ட்போனினை விரைவில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News