செய்திகள்
தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு

வாகன சோதனையில் ஈடுபட்ட கண்காணிப்பு குழு, பறக்கும் படைகள் கலைப்பு - தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு

Published On 2021-04-06 22:58 GMT   |   Update On 2021-04-06 22:58 GMT
தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நேற்று தேர்தல் நடைபெற்றது. அதில் 71.79 சதவீத வாக்குப்பதிவு பதிவாகின.
சென்னை:

தமிழகத்தின் அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் வாகன சோதனைக்காக கண்காணிப்பு குழு, பறக்கும்படை, வீடியோ கண்காணிப்பு குழு அமைக்க உத்தரவிடப்பட்டது. அவர்கள் செல்லும் வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவிகள் பொருத்தப்பட்டன.

இந்த குழுக்களின் பணி, வாக்குப்பதிவு நடக்கும் வரை தொடர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் வாக்குப்பதிவு நிறைவடைந்து விட்டது. எனவே கண்காணிப்பு குழு, பறக்கும்படை, வீடியோ கண்காணிப்பு குழு ஆகியவற்றை கலைத்துவிடலாம். மண்டல குழுக்களுக்கான வாகனங்கள், வாக்குப்பதிவு எந்திரம், விவிபாட் எந்திரம் ஆகியவற்றை கொண்டு செல்லும் வாகனங்கள் ஆகியவற்றில் பொருத்தப்பட்டுள்ள ஜி.பி.எஸ். கருவிகளை அப்புறப்படுத்தலாம். 
Tags:    

Similar News