செய்திகள்
டிராய்

டிராய் வெளியிட்டதாக கூறி வைரலாகும் அறிக்கை

Published On 2021-02-10 04:37 GMT   |   Update On 2021-02-10 04:37 GMT
டிராய் வெளியிட்டதாக கூறி சமூக வலைதளங்களில் வைரலாகும் அறிக்கை பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

 
மத்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் எல்டிஇ மொபைல் டவர்களை நிறுவ கட்டணம் வசூலிக்க நிறுவனத்திடம் கேட்டுக் கொண்டுள்ளதாக கூறும் தகவல் அடங்கிய அறிக்கை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

டிராய் வெளியிட்டதாக தெரியும் அறிக்கையில், டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையம்- தனியார் நிறுவனம் ஒன்றுக்கு NOC வழங்கி எல்டிஇ மொபைல் டவர்களை நிறுவ ரூ. 12,500 கட்டணம் வசூலிக்க கேட்டு கொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

இந்த அறிக்கை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதை தொடர்ந்து, தேசிய அமைப்பான Press Information Bureau மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையம் இவ்வாறு எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை என தெரிவித்து உள்ளது. மேலும் மக்கள் யாரும் இதனை நம்பி பணம் கொடுக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது. 

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
Tags:    

Similar News