உள்ளூர் செய்திகள்
விழாவில் அம்மன் பூஞ்சப்பரத்தில் பவனி வந்த காட்சி.

வட்டன்விளை கோவில் கொடை விழா

Published On 2022-05-07 10:04 GMT   |   Update On 2022-05-07 10:04 GMT
பரமன்குறிச்சி அருகேயுள்ள வட்டன்விளை முத்தாரம்மன் கோவிலில் சித்திரை மாத கொடை விழா கடந்த 1-ந்தேதி வருஷாபிஷேகத்துடன் தொடங்கியது.
உடன்குடி:

பரமன்குறிச்சி அருகேயுள்ள வட்டன்விளை முத்தாரம்மன் கோவிலில் சித்திரை மாத கொடை விழா கடந்த 1-ந்தேதி வருஷாபிஷேகத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து விழா நாட்களில் அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, புஷ்பாஞ்சலி108 திருவிளக்கு பூஜை, 108 பால்குட ஊர்வலம், 301 சுமங்கலிபூஜை, கோலாட்டம், கரகாட்டம் தேக ளா நடனங்கள், சந்தன மாரியம்மன் கிளி வாகனத்தில் பவனி, முத்தாரம்மன்சப்பரத்தில் பவனி, அம்மன் மஞ்சள் நீராடி வீதியுலா, வில்லி சை, சிறப்பு அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

நேற்று முன்தினம் அக்னி குண்டம் இறங்குதல், இரவு 8 மணிக்கு ஆடல் பாடல், வரிதாரர்களுக்கு வரிபிரசாதம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார் மற்றும் ஊர்மக்கள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை வட்டன்விளை ஊர்மக்கள், நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News