லைஃப்ஸ்டைல்
கத்திரிக்காய் குருமா

சூப்பரான கத்தரிக்காய் குருமா

Published On 2020-09-24 09:40 GMT   |   Update On 2020-09-24 09:40 GMT
இட்லி, தோசை, புலாவ், சப்பாத்திக்கு தொட்டுகொள்ள அருமையாக இருக்கும் இந்த கத்தரிக்காய் குருமா. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:

கத்தரிக்காய் - கால் கிலோ
கேரட் - 2
குடை மிளகாய் - 2
பச்சை பட்டாணி - 2/4 கப்
பெரிய அளவு வெங்காயம் - 1
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 5
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 தேக்கரண்டி
தயிர் - 2 மேஜைக்கரண்டி
பட்டை - 2
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி
தனியாத்தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
தேங்காய் பால் - அரை கப்
எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
உப்பு - 1 அரை தேக்கரண்டி

செய்முறை:

காய்களை பொடியாக வெட்டிக் கொள்ளவும்.

பட்டை, கிராம்பு, ஏலக்காயை மிக்ஸியில் பொடி செய்துக் கொள்ளவும்.

வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு வதக்கவும்.

வெங்காயம் வதங்கியவுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை கிளறவும்.

பிறகு கத்தரிக்காய், கேரட் சேர்த்து வதக்கவும்.

தயிர் மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து தண்ணீர் வற்றியவுடன் தக்காளி சேர்த்து வதக்கவும்.

பிறகு தனியாத்தூள் மற்றும் மிளகாய்த்தூள் சேர்க்கவும்.

இப்போது குடைமிளகாய் மற்றும் பச்சை பட்டாணி சேர்த்து வதக்கி விட்டு நான்கு கப் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்க்கவும்.

காய்கள் வெந்தவுடன் தேங்காய்ப்பால் ஊற்றி, கொதி வந்தவுடன் இறக்கி பரிமாறவும்.

சூப்பரான கத்தரிக்காய் குருமா ரெடி.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News