தொழில்நுட்பம்
ரெட்மி இயர்பட்ஸ் எஸ்

இந்தியாவில் குறைந்த விலையில் ரெட்மி வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம்

Published On 2020-05-26 07:39 GMT   |   Update On 2020-05-26 07:39 GMT
ரெட்மி பிராண்டின் புதிய இயர்பட்ஸ் எஸ் ட்ரூ வயர்லெஸ் இயர்போன்கள் இந்திய சந்தையில் குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.



சியோமி நிறுவனம் இந்தியாவில் ரெட்மி இயர்பட்ஸ் எஸ் மாடலை அறிமுகம் செய்தது. தற்சமயம் கருப்பு நிறத்தில் மட்டும் கிடைக்கும் ரெட்மி இயர்பட்ஸ் ப்ளூடூத் 5.0 கனெக்டிவிட்டி கொண்டிருக்கிறது. புதிய இயர்போன்கள் அனைவரின் காதுகளிலும் கச்சிதமாக பொருந்தி கொள்ள ஏதுவாக மொத்தம் மூன்று இயர்டிப்கள் வழங்கப்படுகின்றன.

7.2 எம்எம் டிரைவர்களை கொண்டிருக்கும் ரெட்மி இயர்பட்ஸ் எஸ் IPX4 தரச்சான்று பெற்ற வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது. ஒரு இயர்பட் எடை 4.1 கிராம் ஆகும். இது தற்சமயம் கிடைக்கும் இயர்போன்களில் மிகவும் எடை குறைந்த மாடல் எனலாம்.



ஒருமுறை சார்ஜ் செய்தால் இந்த இயர்போன்கள் நான்கு மணி நேரத்திற்கு பேக்கப் வழங்கும் என கூறப்படுகிறது. இத்துடன் சார்ஜிங் கேஸ் பேட்டரி திறனை சேர்க்கும் போது 12 மணி நேரத்திற்கு பேக்கப் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி, ரியல்டெக் RL8763BFR ப்ளூடூத் சிப் கொண்டு என்விரான்மென்ட்டல் நாய்ஸ் ரிடக்ஷன் வசதியை வழங்குகிறது. 

புதிய இயர்பட்ஸ் விலை ரூ. 1799 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இதன் விற்பனை மே 27 ஆம் தேதி துவங்குகிறது. இதன் விற்பனை அமேசான், எம்ஐ ஹோம் ஸ்டோர் மற்றும் எம்ஐ ஸ்டூடியோ விற்பனையகங்களில் நடைபெற இருக்கிறது.

முன்னதாக இதே இயர்போன் ரெட்மி ஏர்டாட்ஸ் எஸ் எனும் பெயரில் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. சீனாவில் இதன் விலை இந்திய மதிப்பில் ரூ. 1100 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News