ஆட்டோமொபைல்

சுசுகி GSX-S300 காப்புரிமை புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது

Published On 2018-04-11 11:09 GMT   |   Update On 2018-04-11 11:09 GMT
சீனாவில் சுசுகியின் பங்குதாரர் ஆன ஹோஜூ நிறுவனம் HJ300 மோட்டார்சைக்கிளுக்கான காப்புரிமைக்கு பதிவு செய்திருக்கிறது.
பீஜிங்:

சீன மோட்டார்சைக்கிள் சந்தையில் சுசுகி நிறுவனத்துடன் கூட்டணி வைத்திருக்கும் ஹோஜூ எனும் நிறுவனம் புதிய HJ300 எனும் நேக்டு ரக மோட்டார்சைக்கிளுக்கான காப்புரிமையை பதிவு செய்திருப்பது தெரியவந்துள்ளது.

ஹோஜூ நிறுவனம் சுசுகியின் மோட்டார்சைக்கிள்களை தயாரித்து வழங்குகிறது. அந்த வகையில் ஹோஜூ பதிவு செய்திருக்கும் காப்புரிமைகளில் சுசுகி GSX S300 மோட்டார்சைக்கிள் வரைபடங்கள் இடம்பெற்றிருக்கிறது. இணையத்தில் கசிந்திருக்கும் புகைப்படங்களில் 300 சிசி மோட்டார்சைக்கிள் பெட்ரோல் டேன்க்-இல் ஹோஜூ நிறுவன லோகோ இடம்பெற்றிருக்கிறது.

புதிய மோட்டார்சைக்கிளினை சுசுகி நிறுவனம் GSX S300 பெயரில் ரீ-பிரான்டு செய்ய திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. புதிய ரீ-பரான்டு செய்யப்பட்ட மோட்டார்சைக்கிள்கள் ஐரோப்பிய சந்தைகளில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மோட்டார்சைக்கிள் வடிவைப்பு முந்தைய GSX S750 மாடலை விட கம்பீரமாக காட்சியளிக்கிறது.

காப்புரிமைகளில் சுசுகி GSX-S300 மாடலின் விரிவான அம்சங்கள் இடம்பெறவில்லை என்றாலும் புகைப்படங்களை வைத்து பார்க்கும் போது இதன் இன்ஜின் GSX-S250R மாடலில் வழங்கப்பட்ட 250சிசி பேரலெல் ட்வின் யூனிட் போன்று காட்சியளிக்கிறது. இதன் சேசிஸ் பார்க்க புதிதாகவும், பாக்ஸ் பகுதியின் ஸ்விங் ஆர்ம் புதிய அலுமினியம் ஸ்விங் ஆர்ம்-ஆக மாற்றப்பட்டிருக்கிறது.



புதிய மோட்டார்சைக்கிள் முன்பக்கம் இன்வெர்டெட் ஃபோர்க்ஸ், பின்புறம் மோனோஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது. மற்ற அம்சங்களை பொருத்த வரை புதிய GSX-S300 மாடலில் ஃபுல் எல்இடி ஹெட்லேம்ப், எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

பிரேக்கிங் அம்சங்களை பொருத்த வரை இரண்டு சக்கரங்களிலும் ABS வசதியுடன் கூடிய டிஸ்க் பிரேக் வழங்கப்படுகிறது. இதுதவிர மற்ற வடிவமைப்புகள் அனைத்தும் வழக்கமான GSX மாடல்களை போன்றே காட்சியளிக்கிறது.

புதிய சசுகி GSX-S300 மோட்டார்சைக்கிள் 2018 EICMA விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தாலியில் நடைபெற இருக்கும் விழாவில் அறிமுகமாக இருக்கும் மோட்டார்சைக்கிளின் இந்திய வெளியீடு குறித்து எவ்வித தகவலும் இல்லை. எனினும் புதிய மாடல் இந்தியாவில் 250-300சிசி பிரிவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News