தொழில்நுட்பம்
ஜியோமார்ட்

ரிலையன்ஸ் ஜியோமார்ட் இந்தியாவில் வெளியானது

Published On 2020-01-01 03:53 GMT   |   Update On 2020-01-01 03:53 GMT
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஜியோமார்ட் ஆன்லைன் வர்த்தக சேவை இந்தியாவில் துவங்கப்பட்டது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.



ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிட்டெட் நிறுவனம் ஜியோமார்ட் பெயரில் புதிய ஆன்லைன் வர்த்தக சேவையினை இந்தியாவில் துவங்கியுள்ளது. 

புதிய ஜியோமார்ட் சேவை இந்தியாவில் அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் போன்ற முன்னணி நிறுவனங்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதற்கட்டமாக இந்த சேவை மும்பை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மட்டும் துவங்கப்பட்டுள்ளது. 

ரிலையன்ஸ் ரீடெயில் சார்பில் ஜியோ சந்தாதாரர்களுக்கு ஜியோமார்ட் பற்றிய தகவல்கள் அனுப்பப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. முதற்கட்டமாக மும்பையில் துவங்கப்பட்டுள்ள ஜியோமார்ட் சேவை படிப்படியாக மற்ற பகுதிகளிலும் விரிவுப்படுத்த ரிலையன்ஸ் திட்டமிட்டுள்ளது.



வலைத்தளம் மட்டுமின்றி ஜியோமார்ட் செயலியை உருவாக்கும் பணிகளில் ரிலையன்ஸ் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. புதிய சேவையை கொண்டு வாடிக்கையாளர்கள் சுமார் 50,000-க்கும் அதிகமான மளிகை பொருட்களை வாங்க முடியும். மேலும் பொருட்களை வாடிக்கையாளர்களின் வீட்டிற்கு இலவசமாக டெலிவரி செய்யப்படுகிறது.

புதிய ஆன்லைன் வர்த்தக சேவையின் மூலம் ஆஃப்லைன் - டு - ஆன்லைன் திட்டத்தில் செயல்பட இருக்கிறது. இதில் வியாபாரிகள், உற்பத்தியாளர்கள், சிறு வணிகர்கள் மற்றும் பிராண்டுகளை தொழில்நுட்ப உதவியுடன் நேரடியாக வாடிக்கையாளர்களை தொடர்பு கொள்ள வைக்க ரிலையன்ஸ் திட்டமிட்டுள்ளது.

இதுதவிர ரிலையன்ஸ் நிறுவனம் ஆன்லைன் - டு - ஆஃப்லைன் சந்தையை உள்ளூர் வணிகர்களுக்காக உருவாக்கி வருகிறது. இதன் மூலம் ரிலையன்ஸ் ஜியோமார்ட் சேவையை சீனாவில் அலிபாபா போன்று இந்தியாவில் பிரபலப்படுத்தும் என கூறப்படுகிறது. 
Tags:    

Similar News