ஆன்மிகம்
பொன்னாகவல்லி - நாகேஸ்வரமுடையாருக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்ற போது எடுத்த படம்.

நாகேஸ்வரமுடையார் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

Published On 2021-04-09 08:11 GMT   |   Update On 2021-04-09 08:11 GMT
சீர்காழி நாகேஸ்வரமுடையார் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சீர்காழி கடைவீதியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட நாகேஸ்வரமுடையார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தனி சன்னதியில் ராகு பகவான் அருள் பாலித்து வருகிறார்.

ஆதி ராகு ஸ்தலமாக இந்த கோவில் விளங்குகிறது. இங்கு ஆண்டுதோறும் பங்குனி மாதம் திருவோண நட்சத்திரத்தில் தம்பதி சமேதராய் திருக்கல்யாண கோலத்தில் சாமி-அம்மன் வாசுகியாகிய பாம்புக்கு காட்சி தரும் விழா நடைபெறும்.

இந்த ஆண்டு திருக்கல்யாண உற்சவத்தையொட்டி காலை பஞ்சமூர்த்திகள், ராகு பகவான்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. அதையடுத்து ராகு பகவான் வனத்துக்கு செல்லுதல், ராகு பகவானுக்கு காட்சி தரும் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

பக்தர்கள் சீர்வரிசை எடுத்துக்கொண்டு கோவிலுக்கு வந்ததும் வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்கிட, மங்கலநாணை அணிவித்து திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News