செய்திகள்
இஞ்சி.

காங்கயத்தில் கூவி கூவி இஞ்சி விற்பனை

Published On 2021-07-20 10:01 GMT   |   Update On 2021-07-20 10:01 GMT
கன மழை பெய்வதால், கூடலூரில் இஞ்சி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்:

நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் இஞ்சி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வரத்து அதிகரிப்பால் இஞ்சி விலை கிலோ ரூ.70ஆக இருந்தது. 

இந்தநிலையில் காங்கயம் ரோடு, சி.டி.சி., பஸ் நிறுத்தத்தில் 100 கிலோ இஞ்சியை ஆட்டோவில் வைத்து வியாபாரிகள் விற்றனர்.

அவர்கள் கூறுகையில், கனமழை பெய்வதால், கூடலூரில் இஞ்சி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. 

இருப்பு வைத்து ஓரிரு நாள் கழித்து கொண்டு வந்து விற்கும் வரை மழையால் நனைந்த இஞ்சி தாங்காது. எனவே மலை மாவட்டத்தில் இருந்து விற்பனைக்கு நேரடியாக இங்கு கொண்டு வந்துள்ளோம். 

ஒரு கிலோ இஞ்சி ரூ.50க்கு விற்கிறோம் என்றனர். அவ்வழியாக சென்ற பலரும்  இஞ்சியை வாங்கி சென்றனர். 
Tags:    

Similar News