வழிபாடு
இந்தியாவிலேயே உயரமான பஞ்சமுக விநாயகர் சிலை

இந்தியாவிலேயே உயரமான பஞ்சமுக விநாயகர் சிலை

Published On 2022-01-01 07:28 GMT   |   Update On 2022-01-01 07:28 GMT
இந்த விநாயகர் சிலை இந்தியாவிலேயே அதிக உயரம் கொண்டதாக இருக்கும் என்று நாகலிங்க கணபதி கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
பெங்களூரு சர்வக்ஞ நகர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட நாகவரா பகுதியில் நாகலிங்க கணபதி கோவில் உள்ளது. இந்த கோவிலில் 42 அடி உயர பஞ்சமுக நாகலிங்க விநாயகர் சிலை நிறுவ முடிவு செய்யப்பட்டது. இந்த சிலை ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணியை 32 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய முதல்-மந்திரி எச்.டி.தேவேகவுடா தொடங்கிவைத்தார். அந்த சிலையை வடிக்கும் பணி பல காரணங்களால் தாமதமாக நடைபெற்று வந்தது.

கடந்த 1990-ம் ஆண்டு விநாயகர் சிலை வடிவமைக்க 42 அடி உயர பாறாங்கல் ராட்சத லாரியில் பெங்களூரு புறநகர் மாவட்டம் தொட்டபள்ளாப்பூர் தாலுகா அரவனஹள்ளியில் இருந்து நாகலிங்க கணபதி கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.

அதைத்தொடர்ந்து சிலை வடிவமைக்கும் பணி நடந்தது. தற்போது அந்த சிலை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இறுதி கட்டமாக விநாயகர் சிலையை வடிவமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கிடையே கோவிலில் 42 அடி உயர விநாயகர் சிலைக்கான கல்வெட்டு திறப்பு விழா நேற்று நடந்தது. இதில் சித்தகங்கா மடாதிபதி சித்தலிங்க சுவாமி கலந்துகொண்டு சிறப்பு பூஜை செய்து கல்வெட்டை திறந்துவைத்தார். சிலையை வடிவமைக்கும் பணியை சென்னை மகாபலிபுரத்தை சேர்ந்த ஸ்தபதி அம்பிகாபதி மேற்கொண்டு வருகிறார். இவருடன் மேலும் 40 சிற்ப கலைஞர்களும் பிரமாண்ட விநாயகர் சிலையை வடிவமைத்து வருகிறார்கள். இந்த விநாயகர் சிலை இந்தியாவிலேயே அதிக உயரம் கொண்டதாக இருக்கும் என்று நாகலிங்க கணபதி கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

Tags:    

Similar News