ஆன்மிகம்
விநாயகர்

மாற்றுரைத்த விநாயகர் மகிமை

Published On 2021-03-29 02:30 GMT   |   Update On 2021-03-28 06:21 GMT
திருவாரூர் கோவிலுக்கு மேற்கே கமலாலய குளத்தின் கீழ் கரையில் வடகோடியில் கோவில் கொண்டிருப்பவர் மாற்றுரைத்த விநாயகர். இவருக்கு பின்னே ஓர் அருமையான வரலாறு கூறப்படுகிறது.
திருவாரூர் கோவிலுக்கு மேற்கே கமலாலய குளத்தின் கீழ் கரையில் வடகோடியில் கோவில் கொண்டிருப்பவர் மாற்றுரைத்த விநாயகர் இவருக்கு பின்னே ஓர் அருமையான வரலாறு கூறப்படுகிறது.

சுந்தரர் மணி முத்தாற்றில் பொன்னை இட்டு திருவாரூர் கமலாலயத்தில் எடுத்த அதிசயம் பெரிய புராணத்தில் காணப்படுகிறது. விருத்தாசலம் என்று இந்நாளில் வழங்கும் திருமுதுகுன்றத்தில் இறைவன் தந்த ஆயிரம் பொற்காசுகளையும் இட்டார் சுந்தரர் பெருமான். மணிமுத்தாறு நதியில் இட்ட பொன்னை திருவாரூர் கமலாலய குளத்தில் தர வேண்டும் என்று பெருமானிடம் வேண்டினார். பெருமானும் அவ்வாறே செய்வதாக அருளினார்.

சுந்தரர் பெருமானின் தோழர் பெருமான் தம்மிடம் விளையாடுவார் என்பதை அறிந்து ஆற்றில் இட்ட பொன்னின் சிறுதுண்டினை மச்சமாக வைத்துக் கொண்டார். கமலாலயத்தில் பெருமானும் சுந்தரருக்குப் பொற்காசுகளை வரச் செய்தார். தாம் கையில் வைத்துள்ள மச்சத்தின்படி கமலாலயத்தில் வந்த பொன் இருக்கிறதா? என்பதை அறிய விரும்பி, வந்த பொற்காசுகளையும் வைத்துள்ள மச்சத்தையும் குளக்கரை ஓரம் இருந்த விநாயகர் இடம் தந்து சரிபார்க்கச் சொன்னார்.

விநாயகர் சரி பார்த்தார். பின்பு கமலாலயத்தில் கிடைத்த பொன்மாற்று குறைவாக இருப்பதாக விநாயகர் நீதி கூறினார். அதை பின் தம்பிரான் தோழராகிய சுந்தரர் பெருமானிடம் அதை மாற்றி கேட்டு பெற்று கொண்டார். இவ்வாறு மாற்றினை உரைத்த காரணத்தால் மாற்று உரைத்த விநாயகராக அமைந்து அருள் பாலிக்கிறார் வீதியின் ஓரமாக அமைந்து இருப்பதால் எல்லோராலும் எளிமையாக வழிபட வசதியாகவும் இந்த கோவில் உள்ளது.
Tags:    

Similar News