ஆன்மிகம்
தங்க திருச்சி வாகனத்தில் பகவத் ராமானுஜர் வீதிஉலா

பாஷ்யங்கார் உற்சவம் தொடக்கம்: தங்க திருச்சி வாகனத்தில் பகவத் ராமானுஜர் வீதிஉலா

Published On 2021-04-10 07:48 GMT   |   Update On 2021-04-10 07:48 GMT
திருப்பதி கோவிலில் பாஷ்யங்கார் உற்சவம் வருகிற 27-ந்தேதி வரை 19 நாட்கள் நடப்பதால் தினமும் கோவிலில் மாலை நேரத்தில் சஹஸ்ர தீபலங்கார சேவைக்கு பின் கோவிலில் உள்ள பகவத் ராமானுஜர் சன்னதியில் சாத்துமுறை நடக்கிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று பாஷ்யங்கார் உற்சவம் தொடங்கியது. இந்த உற்சவம் வருகிற 27-ந்தேதி வரை 19 நாட்கள் நடப்பதால் தினமும் கோவிலில் மாலை நேரத்தில் சஹஸ்ர தீபலங்கார சேவைக்கு பின் கோவிலில் உள்ள பகவத் ராமானுஜர் சன்னதியில் சாத்துமுறை நடக்கிறது.

‘விஷிஷ்டா தைவத்யா சித்தபரம் மீமாம்சா’ என்ற தலைப்பில் எழுதப்பட்ட கட்டுரை புத்தகம் ஒன்றின் பெயரை ‘ஸ்ரீபாஷ்யம்’ என மாற்றியதால் பகவத் ராமானுஜருக்கு பாஷ்யங்கார் என்ற பெயர் வந்தது. அதிலிருந்தே வைணவர்கள் பகவத் ராமானுஜரை ‘பாஷ்யங்கார்’ என அழைத்து வந்தனர்.

பாஷ்யங்கார் உற்சவத்தின் முதல் நாளான நேற்று மாலை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமி ஒரு தங்கத் திருச்சி வாகனத்திலும், உற்சவர் பகவத் ராமானுஜர் மற்றொரு தங்கத்திருச்சி வாகனத்திலும் எழுந்தருளி ஸ்ரீவாரி கோவிலில் இருந்து வெளியே வந்து நான்கு மாடவீதிகளில் ஊர்வலமாக ெசன்று பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

அதில் பெரிய ஜீயா் சுவாமிகள், சின்ன ஜீயா் சுவாமிகள் மற்றும் தேவஸ்தான அதிகாரிகள், அர்ச்சகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News