செய்திகள்
ரஜினிகாந்த்

டெங்கு காய்ச்சலை தடுக்க பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் கொடுங்கள்- ரஜினிகாந்த் உத்தரவு

Published On 2019-10-20 10:52 GMT   |   Update On 2019-10-20 10:52 GMT
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் அதிக அளவில் உள்ளதால் அதை தடுக்க பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் கொடுங்கள் என்று ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை:

தர்பார் படப்பிடிப்பை முடித்த நடிகர் ரஜினி அக்டோபர் 13-ல் ஆன்மீக பயணமாக ரிஷிகேஷ் கேதார் நாத் பாபாஜி ஆசிரமம் மற்றும் பத்ரிநாத் பகுதிகளுக்கு சென்றார். ரஜினியுடன் மகள் ஐஸ்வர்யாவும் சென்றார். ஐந்து நாட்கள் ஆன்மிக பயணத்தை முடித்து   சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் `பயணம் சிறப்பாக இருந்தது' என மகிழ்ச்சி தெரிவித்தார். 

தர்பார் படத்தை முடித்த கையோடு கட்சியை ஆரம்பித்து தமிழக சட்டசபை தேர்தலுக்கான பணிகளை ரஜினி தீவிரப்படுத்துவார் என நம்பியிருந்த அவரது மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு ரஜினி மீண்டும் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக அறிவித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனாலும் `ரஜினி திட்ட மிட்டபடி சட்டசபை தேர்தலுக்கு முன் கட்சியை ஆரம்பித்து தேர்தலை சந்திப்பார்' என அவருக்கு நெருங்கிய வட்டாரத்தினர் நம்புகின்றனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது:-

சட்டசபை தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன் அல்லது ஆறு மாதத்தில் கட்சி ஆரம்பித்து சூட்டோடு சூடாக தேர்தலை சந்திப்பதே ரஜினியின் திட்டம். 'ரஜினியின் 168-வது படத்தை சிவா இயக்குகிறார். இதன் படப்பிடிப்பின் முடிவில் அல்லது படம் வெளியாகும் போது ரஜினி கட்சி அறிவிப்பை வெளியிடுவார்' என்றனர். 

மக்கள் பிரச்னைகளில் தீவிர கவனம் செலுத்தி வரும் ரஜினி மக்கள் மன்றத்தினர் தற்போது வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலுக்கு உண்டான முன்னெச்சரிக்கை பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர். ரஜினியின் உத்தரவை அடுத்தே இதில் ஈருபட்டு வருகின்றனர். 

வடசென்னை ரஜினி மக்கள் மன்றத்தின் அடுத்த கட்டப் பணியாக வட சென்னையில் அனைத்து பகுதியிலும் இன்று நிலவேம்பு கஷாயத்தை இலவசமாக வழங்குகின்றனர். மற்ற பகுதிகளிலும் இது தொடர உள்ளது. இதற்கு முன் குடிநீர் தட்டுப்பாட்டின் போது நகர் முழுவதும் இலவசமாக தண்ணீர் வினியோகித்தனர். 
Tags:    

Similar News