உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

தூத்துக்குடி-மதுரை புதிய வழித்தடத்தில் ரெயில் சோதனை ஓட்டம்

Published On 2022-01-12 09:38 GMT   |   Update On 2022-01-12 09:38 GMT
தூத்துக்குடியில் இருந்து விளாத்திகுளம் வழியாக மதுரைக்கு புதிதாக ரெயில்வே தண்டவாளம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பாதையில் சுமார் 18 கிலோ மீட்டர் தூரம் இன்று ரெயில் என்ஜின் சோதனை ஓட்டம் நடந்தது.
தூத்துக்குடி:

தூத்துக்குடியில் இருந்து மீளவிட்டான், மேலமருதூர், குளத்தூர், விளாத்திகுளம், நாகலாபுரம், புதூர், பந்தல்குடி, அருப்புக்கோட்டை, கல்குறிச்சி, காரியாப்பட்டி, ஆவியூர், பாறைப்பட்டி, திருப்பரங்குன்றம் வழியாக மதுரைக்கு 143 கிலோ மீட்டர் தூரம் ரெயில் பாதை அமைக்கப்படுகிறது.

 தூத்துக்குடி மீளவிட்டானில் இருந்து மேலமருதூர் வரை 18 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரெயில் பாதை அமைக்கும் பணி முடிக்கப்பட்டு உள்ளது. 

இந்த ரெயில் பாதையில் இன்று   ரெயில் என்ஜினை   இயக்கி சோதனை ஓட்டம் நடைபெற்றது. ரெயில் பாதையில் 120 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயில் என்ஜினை இயக்கி சோதனை ஓட்டம் நடந்தது.
Tags:    

Similar News