ஆன்மிகம்
இஸ்லாம்

நாகூரில் மிலாதுநபி விழா ஊர்வலம் நடைபெறுமா?: பொதுமக்கள் எதிர்பார்ப்பு

Published On 2020-10-30 04:59 GMT   |   Update On 2020-10-30 04:59 GMT
நாகூரில் நபிகள் நாயகம் பிறந்தநாள் விழாவாக மிலாது நபி ஊர்வலம் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த ஆண்டு மிலாதுநபி விழா ஊர்வலம் நடைபெறுமா? என அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
நாகூரில் நபிகள் நாயகம் பிறந்தநாள் விழாவாக மிலாது நபி ஊர்வலம் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். கொரோனா ஊரடங்கு காரணமாக கோவில்கள், தர்காக்கள், ஆலயங்களில் நடைபெறும் திருவிழாக்கள், ஊர்வலம் போன்ற முக்கிய நிகழ்ச்சிகளுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.

தற்போது நாகூரில் உள்ள இஸ்லாமிய பள்ளி மாணவ- மாணவிகள் கலந்து கொள்ளும் மிலாதுநபி ஊர்வலம் நடத்த தடை செய்யப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு ஊர்வலத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளதால் மாணவ-மாணவிகள் கவலையில் உள்ளனர்.

மேலும் அரசின் வழிகாட்டுதலின் படி ஊர்வலத்தை பின்னர் நடத்துவது என்று மிலாது கமிட்டி முடிவு செய்துள்ளது. ஆனாலும் இந்த ஆண்டு மிலாதுநபி விழா ஊர்வலம் நடைபெறுமா? என அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
Tags:    

Similar News