தொழில்நுட்பம்
போக்கோ X3 GT

அந்த போக்கோ ஸ்மார்ட்போன் இங்க வெளியாகாது

Published On 2021-07-29 11:34 GMT   |   Update On 2021-07-29 11:34 GMT
போக்கோ நிறுவனத்தின் புதிய X சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்திய வெளியீடு குறித்து அந்நிறுவன அதிகாரி பதில் அளித்து இருக்கிறார்.


போக்கோ நிறுவனம் சமீபத்தில் தனது X3 GT ஸ்மார்ட்போனினை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. இதன் துவக்க விலை 200 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 14,855 என நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படாது என போக்கோ இந்தியா இயக்குனர் அனுஜ் ஷர்மா தெரிவித்து இருக்கிறார்.

'இந்தியாவுக்கென பெரிய திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. எனினும், போக்கோ X3 GT இதில் இடம்பெறவில்லை. வாடிக்கையாளர்கள் மத்தியில் எந்த குழப்பத்தையும் ஏற்படுத்த விரும்பவில்லை,' என அனுஜ் ஷர்மா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு இருக்கிறார். 



அம்சங்களை பொருத்தவரை போக்கோ X3 GT மாடலில் 6.6 இன்ச் FHD+ 2400x1080 பிக்சல் டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரேஷ் ரேட், மீடியாடெக் டிமென்சிட்டி 1100 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 64 எம்பி பிரைமரி கேமராவுடன் மூன்று சென்சார்கள், 16 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. 

இத்துடன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 67 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பிளாக், வைட் மற்றும் கிரீன் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது.
Tags:    

Similar News