ஆன்மிகம்
சிதம்பரம் நடராஜருக்கு மகா அபிஷேகம்

சிதம்பரம் நடராஜருக்கு மகா அபிஷேகம்

Published On 2021-05-04 05:10 GMT   |   Update On 2021-05-04 05:10 GMT
சிதம்பரத்தில் உள்ள புகழ்பெற்ற நடராஜர் கோவிலில் ஆண்டுக்கு 6 மகாஅபிஷேகம் நடைபெறும். இதில் சித்திரை மாதத்தில் நடைபெறும் மகாஅபிஷேகம் நேற்று நடைபெற்றது.
சிதம்பரத்தில் உள்ள புகழ்பெற்ற நடராஜர் கோவிலில் ஆண்டுக்கு 6 மகாஅபிஷேகம் நடைபெறும். இதில் சித்திரை மாதத்தில் நடைபெறும் மகாஅபிஷேகம் நேற்று நடைபெற்றது. சித்சபை முன்பு உள்ள கனகசபையில் நேற்று மாலை 6.30 மணிக்கு தொடங்கி இரவு 11 மணி வரை நடைபெற்றது.

இதையொட்டி கோவில் வளாகத்தில் ருத்ர யாகம் நடைபெற்றது. இதில் கணபதி ஹோமம், நவகிரக யாகம், தனபூஜை நடந்து ருத்ர யாகம் நடந்தது.

மாலையில், கோ பூஜை, கஜ பூஜை, அஸ்வ பூஜை, வடுக பூஜை, கன்யா பூஜை, சுவாசினி பூஜை, தம்பதி பூஜை, பூர்ணாகுதி நடந்து, 6 மணிக்கு மேல் மகா ருத்ர, மகா அபிஷேகம் நடைபெற்றது.
Tags:    

Similar News