உலகம்
விமான சேவை

சீனாவுக்கு பதிலடி... 44 விமானங்களை ரத்து செய்தது அமெரிக்கா

Published On 2022-01-22 09:59 GMT   |   Update On 2022-01-22 10:45 GMT
அமெரிக்காவில் இருந்து ஏர் சீனா, சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ், சீனா சதர்ன் ஏர்லைன்ஸ் மற்றும் ஜியாமென் ஏர்லைன்ஸ் ஆகிய நிறுவனங்களால் 44 விமானங்கள் இயக்கப்படவிருந்தன.
வாஷிங்டன்:

கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக விமான சேவைகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. பாதிப்பு அதிகரிக்கும்போது, சூழ்நிலைகளுக்கு ஏற்ப வெளிநாடுகளுக்கான விமானங்கள் ரத்து செய்யப்படுகின்றன. 

இந்நிலையில், அமெரிக்காவிலிருந்து சீனாவுக்குச் செல்லும் 44 விமான சேவைகளை அமெரிக்க அரசாங்கம் ரத்து செய்துள்ளது. 4 சீன விமான நிறுவனங்களைச் சேர்ந்த சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

ஜனவரி 30 மற்றும் மார்ச் 29-க்கு இடைப்பட்ட காலகட்டங்களில் அமெரிக்காவில் இருந்து ஏர் சீனா, சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ், சீனா சதர்ன் ஏர்லைன்ஸ் மற்றும் ஜியாமென் ஏர்லைன்ஸ் ஆகிய நிறுவனங்களால் 44 விமானங்கள் இயக்கப்படவிருந்த நிலையில், அந்த விமானங்கள் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளன.

கொரோனா பரவல் காரணமாக சீன அரசு, சமீபத்தில் அமெரிக்க விமான சேவைகளை ரத்து செய்த நிலையில், அதற்கு பதிலடியாக அமெரிக்காவும் சீன நிறுவனங்களின் விமானங்களுக்கு தடை விதித்துள்ளது. 
Tags:    

Similar News