தொழில்நுட்பம்
ஜியோணி

வேண்டுமென்றே செய்த காரியம் - சர்ச்சையில் சிக்கிய சீன நிறுவனம்

Published On 2020-12-08 07:50 GMT   |   Update On 2020-12-08 07:50 GMT
வேண்டுமென்றே செய்த காரியத்தால் சர்ச்சையில் சிக்கிய சீன நிறுவனம் என்ன செய்தது என்பதை தொடர்ந்து பார்ப்போம்.


சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஜியோணி பயனர்களின் ஸ்மார்ட்போன்களில் வேண்டுமென்றே ட்ரோஜன் ஹோர்ஸ் குறியீடுகளை செலுத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த செயலை சீன ஒழுங்குமுறை ஆணையம் கண்டறிந்து இருக்கிறது.

ஸ்மார்ட்போன்களில் ட்ரோஜன் செலுத்தியதன் மூலம் சட்டவிரோதமாக பயனர்களுக்கு எந்த தகவலும் தெரிவிக்காமல் வருவாய் ஈட்டும் முயற்சியில் ஜியோணி ஈடுபட்டு வந்திருக்கிறது. இதுபோன்ற ட்ரோஜன் ஹோர்ஸ் குறியீடுகள் சுமார் 2.6 கோடி ஸ்மார்ட்போன்களில் செலுத்தப்பட்டு இருக்கிறது.

ஜியோணியின் தாய் நிறுவனமான ஷென்சென் ஷிபு டெக்னாலஜி கோ லிமிட்டெட் இந்த செயலை செய்ததாக கூறப்படுகிறது. டிசம்பர் 2018 முதல் அக்டோபர் 2019 வரையிலான காலக்கட்டத்தில் இந்த நிறுவனம் ஜியோணி ஸ்மார்ட்போன்களில் `ஸ்டோரி லாக் ஸ்கிரீன்' எனும் செயலியை இன்ஸ்டால் செய்தது.

இந்த செயலி தேவையற்ற விளம்பரங்களை புகுத்தி, பயனர்களை நீண்ட நேரம் செயலியை பயன்படுத்த வைத்து அதன் மூலம் வருவாய் ஈட்டி வந்துள்ளது. இதுபோன்ற செயல் புல் மெத்தட் என அழைக்கப்படுகிறது. ட்ரோஜன் ஹோர்ஸ் அப்டேட் மூலம் ஜியோணி நிறுவனம் இந்திய மதிப்பில் ரூ. 31.5 கோடி வரை வருவாய் ஈட்டி இருக்கிறது.

குற்ற சம்பவத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து சு லி, ஷூ யிங், ஜியா ஹென்குயிங் மற்றும் பான் குயி உள்ளிட்ட நிர்வாக அதிகாரிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு 3 முதல் 3.5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் இந்திய மதிப்பில் ரூ. 22,60,428 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News