செய்திகள்
திருப்பதி

திருப்பதியில் ரூ.1 கோடிக்கு கீழ் குறைந்த உண்டியல் வருமானம்

Published On 2021-05-03 07:43 GMT   |   Update On 2021-05-03 12:31 GMT
திருப்பதியில் 10824 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 5503 பேர் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.78 லட்சம் உண்டியல் வசூலாகியிருந்தது. தொடர்ந்து ரூ.1 கோடிக்கு கீழ் உண்டியல் வருமானம் குறைந்து வருகிறது.
திருப்பதி

கொரோனா தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உயிர்சேதம் மட்டுமல்லாமல் பொருளாதார சேதமும் இதனால் ஏற்பட்டுள்ளது. இதிலிருந்து உலக மக்கள் விடுபட்டு ஆரோக்கியமாக வாழ தேவஸ்தானம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சுந்தரகாண்ட பாராயணத்தை தொடங்கியது.

திருமலை ஏழுமலையான் கோவில் அருகில் உள்ள நாதநீராஜன மண்டபத்தில் இந்தப் பாராயணம் தினசரி காலை 7 மணி முதல் 8 மணி வரை நடந்து வருகிறது. சுந்தரகாண்டத்தில் மொத்தம் 68 சர்க்கங்கள் உள்ளன. இதில் தினசரி 10 முதல் 20 ஸ்லோகங்கள் என பாராயணம் செய்யப்பட்டு வருகிறது.

சுந்தரகாண்ட பாராயணம் தொடங்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை வரை 326 நாட்களில் 57 சர்க்கங்கள் முழுவதும் பாராயணம் செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு செய்யப்படும் பாராயணம் 100 முதல் 200 ஸ்லோகங்களை நிறைவு செய்தவுடன் அதை அகண்ட பாராயணம் மகா தேவஸ்தானம் நடத்தி வருகிறது. அதன்படி நேற்று (ஞாயிற்றுக்கிழமையில்) 13ஆம் கட்ட சுந்தரகாண்ட பாராயணம் நடந்தது.

அதில் 55 முதல் 57 வது சர்க்கங்களில் உள்ள 171 ஸ்லோகங்கள் பாராயணம் செய்யப்பட்டன.திருமலையில் தர்மகிரி வேதபாடசாலை தலைமை ஆச்சாரியார் சிவசுப்பிரமணிய அவதானி தலைமையில் 200 வேத பண்டிதர்கள் இந்த பாராயணத்தை நடத்தினர்.

இதில் தேவஸ்தான அதிகாரிகள் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருப்பதியில் நேற்று முன்தினம் 9703 பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதில் 5734 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.46 லட்சம் வசூலாகியுள்ளது.

இந்த ஆண்டில் இதுதான் மிக குறைந்த உண்டியல் வருவாயாகும்.

திருப்பதியில் நேற்று 10824 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 5503 பேர் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.78 லட்சம் உண்டியல் வசூலாகியிருந்தது. தொடர்ந்து ரூ.1 கோடிக்கு கீழ் உண்டியல் வருமானம் குறைந்து வருகிறது.
Tags:    

Similar News