தொழில்நுட்பம்
வி

வோடபோன் ஐடியாவின் புதிய பிராண்டிங் அறிமுகம்

Published On 2020-09-09 06:38 GMT   |   Update On 2020-09-09 06:38 GMT
வோடபோன் ஐடியா நிறுவனங்கள் ஒன்றிணைந்த புதிய பிராண்டிங் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

வோடபோன் ஐடியா நிறுவனங்களின் ஒருங்கிணைந்து பிராண்டிங் அறிமுகம் செய்யப்பட்டது. புது பிராண்டு வி என அழைக்கப்படுகிறது. 

இது வோடபோன் மற்றும் ஐடியா என இரு பெயர்களின் முதல் எழுத்துக்களை கொண்டது. இது இரு நிறுவனங்களையும் குறிக்கிறது. இதனால் இரு எழுத்துகளை இணைத்து புது பிராண்டின் பெயராக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.



புதிய பிராண்டு அறிவிப்பு ஆன்லைன் நேரலை நிகழ்வின் மூலம் அறிவிக்கப்பட்டது. முன்னதாக 2018 ஆகஸ்ட் 31 ஆம் தேதி இரு நிறுவனங்கள் இணைந்தன. தற்சமயம் இரு நிறுவனங்கள் இணைப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதன் காரணமாக புது பிராண்டு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதைத் தொடர்ந்து புதிய பிராண்டிங் வலைதளம், செயலி உள்ளிட்டவற்றில் மாற்றப்பட்டு விட்டது. விரைவில் இது புதிய சிம் கார்டு, பில், விளம்பர போர்டு போன்றவற்றிலும் வி பிராண்டிங் பயன்படுத்தப்பட இருக்கிறது. இரு நிறுவனங்கள் கூட்டு, உலகின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனங்களின் இணைப்பு ஆகும்.

புதிய பிராண்டு பல கோடி இந்தியர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த டிஜிட்டல் அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
Tags:    

Similar News