செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

விபத்து இல்லாத தமிழகம் உருவாக சாலை விதிகளை மதியுங்கள்- எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்

Published On 2021-01-17 08:18 GMT   |   Update On 2021-01-17 08:18 GMT
சாலை விதிகளை முழுமையாக கடைபிடித்து, விபத்துகளை தவிர்த்து, விலைமதிப்பற்ற தங்களின் உயிர்களை பாதுகாத்து, விபத்தில்லா தமிழ்நாட்டை உருவாக்கிட மக்கள் உதவிட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னை:

தமிழ்நாடு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள 32-வது தேசிய சாலைப் பாதுகாப்பு மாத வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-

பொதுமக்களிடையே சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை தவிர்க்கும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் சாலைப் பாதுகாப்பு மாதம் கடைபிடிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு 32-வது தேசிய சாலைப் பாதுகாப்பு மாதம் நாளை முதல் ஒரு மாத காலம் சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு என்ற கருப்பொருளை மையப்படுத்தி கடைபிடிக்கப்படும்.

அம்மாவின் அரசு, சாலை விபத்தில்லா தமிழ்நாடு என்ற இலக்கை அடைவதற்காக தமிழ்நாடு சாலை பாதுகாப்பு இயக்கம் அமைக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற சாலைப் பாதுகாப்பு குழுவின் வழிகாட்டுதலின்படி, 2016-ம் ஆண்டை அடிப்படை ஆண்டாக கொண்டு 2020-ம் ஆண்டில் சாலை விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்புகள் 54.04 சதவீதமாகவும் மற்றும் சாலை விபத்துகள் 38.23 சதவீதமாகவும் குறைந்துள்ளது.

மேலும், ஒவ்வொரு 10,000 வாகனங்களுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2000-ம் ஆண்டில் 19 நபர்கள் என்ற அளவிலிருந்து 2020-ம் ஆண்டில் 2 நபர்களாக குறைந்துள்ளது.

பொதுமக்கள் அனைவரும் தமிழ்நாடு அரசின் சாலைப் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி, சாலை விதிகளை முழுமையாக கடைபிடித்து, விபத்துகளை தவிர்த்து, விலைமதிப்பற்ற தங்களின் உயிர்களை பாதுகாத்து, விபத்தில்லா தமிழ்நாட்டை உருவாக்கிட உதவிட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News