செய்திகள்
மயிலாப்பூரில் மினி கிளினிக்கை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

மயிலாப்பூரில் மினி கிளினிக்கை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்

Published On 2020-12-14 06:39 GMT   |   Update On 2020-12-14 06:39 GMT
வியாசர்பாடி, மயிலாப்பூரில் மினி கிளினிக்கை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
சென்னை:

தமிழ்நாட்டில் கொரோனா பரிசோதனையை விரைவாக மேற்கொள்ள 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் தொடங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார்.

இந்தநிலையில், இன்று காலை சென்னை ராயபுரம், வியாசர்பாடி மற்றும் மயிலாப்பூர் ஆகிய பகுதிகளுக்கு நேரில் சென்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மினி கிளினிக்குகளை தொடங்கி வைத்தார்.

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் மட்டும் 200 மினி கிளினிக்குகள் அமைகிறது. முதற்கட்டமாக, 47 இடங்களில் இது அமைக்கப்படுகிறது. 20 இடங்களில் இன்று முதல் முதல் செயல்படத் தொடங்குகிறது.

இந்த மினி கிளினிக்குகள் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். கிராமப்புறங்களில் மட்டும் மாலை 7 மணி வரை திறந்திருக்கும். இந்த மினி கிளினிக்கில் ஒரு டாக்டர், ஒரு நர்சு, ஒரு மருத்துவ பணியாளர்கள் இருப்பார்கள்.
Tags:    

Similar News