வழிபாடு
தருமபுரம் ஆதீனம் பாதயாத்திரையாக ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் கோவிலுக்கு சென்ற போது எடுத்த படம்.

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் இருந்து தருமபுரம் ஆதீனம் ஆக்கூருக்கு பாதயாத்திரை

Published On 2022-03-29 03:26 GMT   |   Update On 2022-03-29 03:26 GMT
தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அவரது வழிபாட்டு கடவுளான சொக்கநாத பெருமாளுடன் குருலிங்க சங்கம பாதயாத்திரையாக மயிலாடுதுறையிலிருந்து திருக்கடையூர் கோவிலுக்கு வந்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆயுள் விருத்திக்காக பூஜைகள் நடைபெறுவது வழக்கம். பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் நேற்று முன்தினம் குடமுழுக்கு நடைபெற்றது. இதையொட்டி தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அவரது வழிபாட்டு கடவுளான சொக்கநாத பெருமாளுடன் குருலிங்க சங்கம பாதயாத்திரையாக மயிலாடுதுறையிலிருந்து திருக்கடையூர் கோவிலுக்கு வந்தார்.

குடமுழுக்கை முடித்துவிட்டு நேற்று மாலை தருமபுரம் ஆதீனம் மாலை சொக்கநாதருடன் ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் கோவிலுக்கு சென்றார். முன்னதாக ஆதீனத்துக்கு மட விளக்கத்தை சுற்றியுள்ள கணேச குருக்கள் உள்பட பல்வேறு குருக்கள் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர். மேலும் ஆரத்தி எடுத்து வழிபட்டனர்.
Tags:    

Similar News