ஆட்டோமொபைல்
மஹிந்திரா எக்ஸ்யுவி500

இணையத்தில் வெளியான 2021 மஹிந்திரா எக்ஸ்யுவி500 புதுவேரியண்ட் ஸ்பை படங்கள்

Published On 2021-02-20 10:40 GMT   |   Update On 2021-02-20 10:40 GMT
மஹிந்திரா நிறுவனத்தின் 2021 எக்ஸ்யுவி500 மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.


மஹிந்திரா நிறுவனத்தின் இரண்டாம் தலைமுறை எக்ஸ்யுவி 500 மாடல் ஸ்பை படங்கள் மீண்டும் இணையத்தில் வெளியாகி உள்ளன. இந்த முறை வெளியாகி இருக்கும் படங்களில் இருப்பது எக்ஸ்யுவி500 பெட்ரோல் மாடல் ஆகும். இதில் மஹிந்திரா நிறுவனத்தின் புதிய 2.0 லிட்டர் எம்ஸ்டாலியன் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது.

மஹிந்திராவின் 2.0 லிட்டர் எம்ஸ்டாலியன் டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் 2.2 லிட்டர் எம்ஹாக் டீசல் என்ஜின் இரண்டாம் தலைமுறை மஹிந்திரா தார் மாடலில் வழங்கப்பட்டு இருந்தது. இதில் பெட்ரோல் என்ஜின் எக்ஸ்யுவி500 மாடலில் 190 பிஎஸ் பவர் வழங்கும் என தெரிகிறது.



முந்தைய தகவல்களை போன்றே இம்முறை வெளியாகி இருக்கும் படங்களில் புதிய எக்ஸ்யுவி500 மாடலில் பானரோமிக் சன்ரூப் வழங்கப்படும் என தெரியவந்துள்ளது. இத்துடன் எம்ஜி குளோஸ்டர் மாடலில் உள்ளதை போன்ற லெவல் 1 ஆட்டோனோமஸ் தொழில்நுட்பம் வழங்கப்படலாம்.

இது அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல், லேன் கீப் அசிஸ்ட் மற்றும் ஆட்டோனோமஸ் எமர்ஜென்சி பிரேக்கிங் போன்ற வசதிகளை வழங்குகிறது. புதிய எக்ஸ்யுவி500 மாடலின் அறிமுக நிகழ்வு பலமுறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், விரைவில் இது நடைபெறும் என தெரிகிறது. 

புதிய மஹிந்திரா எக்ஸ்யுவி500 மாடல் விலை ரூ. 14 லட்சத்தில் துவங்கும் என தெரிகிறது. புதிய எக்ஸ்யுவி500 மாடல் எம்ஜி ஹெக்டார், டாடா ஹேரியர் மற்றும் டாடா சபாரி போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும்.
Tags:    

Similar News