கிச்சன் கில்லாடிகள்
வாழைப்பூ பக்கோடா

வாழைப்பூவில் பக்கோடாவா? வாங்க பார்க்கலாம்...

Published On 2022-04-13 09:34 GMT   |   Update On 2022-04-13 09:34 GMT
வெங்காய பக்கோடா, மெது பக்கோடா, பாகற்காய் பக்கோடா சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வாழைப்பூவில் எப்படி பக்கோடா செய்து என்று பார்க்கலாம் வாங்க...
தேவையானவை:

வாழைப்பூ - 1
வெங்காயம் - 1 (நறுக்கவும்)  
மோர் - 1 கப்
கடலை மாவு - 1 கப்
மிளகாய்த் தூள் - தேவைக்கு
சோள பிளவர் மாவு- 1 டேபிள்ஸ்பூன்
நறுக்கிய கறிவேப்பிலை - தேவைக்கு
எண்ணெய், தண்ணீர் - தேவைக்கு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வாழைப்பூவை சுத்தப்படுத்தி பொடிதாக நறுக்கி மோரில் போட்டு அலசி எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதனுடன் கடலை மாவு, சோள பிளவர் மாவு, மிளகாய் தூள், வெங்காயம், கறிவேப்பிலை, தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்துகொள்ள வேண்டும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கொஞ்சம் கொஞ்சமாக மாவு கலவையை போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்க வேண்டும்.

சூப்பரான வாழைப்பூ பக்கோடா ரெடி.
Tags:    

Similar News