செய்திகள்
4 விக்கெட் வீழ்த்திய ரபாடா

பரபரப்பான ஆட்டத்தில் ஐதராபாத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது டெல்லி

Published On 2020-11-08 17:51 GMT   |   Update On 2020-11-08 18:01 GMT
அபுதாபியில் நடந்த பரபரப்பான ஆட்டத்தில் ஐதராபாத் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது டெல்லி கேப்பிடல்ஸ் அணி.
அபுதாபி:

ஐபிஎல் தொடரின் குவாலிபையர்-2 அபுதாபியில் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.

டாஸ் வென்ற டெல்லி பேட்டிங்கை தேர்வு செய்தது. மார்கஸ் ஸ்டாய்னிஸ், ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

இருவரும் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் டெல்லி கேப்பிட்டல்ஸ் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.

ஸ்டாய்னிஸ் 38 ரன்னில் அவுட்டானார். ஷ்ரேயாஸ் அய்யர் 21 ரன்னில் வெளியேறினார். தவான் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்து 78 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த ஹெட்மையர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 

இறுதியில், டெல்லி கேப்பிட்டல்ஸ் 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்தது. ஹெட்மையர் 22 பந்தில் 4 பவுண்டரி, 1 சிக்சருடன் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதையடுத்து, 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் வார்னர் 2 ரன்னிலும், பிரியம் கார்க் 17 ரன்னிலும் அவுட்டாகினர். மணீஷ் பாண்டே 21 ரன்னில் 
வெளியேறினார். ஹோல்டர் 11 ரன்னில் ஆட்டமிழந்தார்.

ஒருபுறம் விக்கெட்டுக்கள் வீழ்ந்தாலும் கேன் வில்லியம்சன் பொறுப்புடன் ஆடினார். அவர் 45 பந்தில் 4 சிக்சர், 5 பவுண்டரியுடன் 67 ரன்கள் எடுத்து அவுட்டானார். 

அப்துல் சமதுடன் ரஷீத் கான் ஜோடி சேர்ந்தார். சமது 15 பந்தில் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 19-வது ஓவரை வீசிய ரபாடா 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

இறுதியில், ஐதராபாத் அணி 8 விக்கெட்டுக்கு 172 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் டெல்லி அணி 17 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் அணி டெல்லி அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 

டெல்லி அணி சார்பில் ரபாடா 4 விக்கெட்டு, ஸ்டாய்னிஸ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

மும்பை மற்றும் டெல்லி அணிகள் மோதும் இறுதிப்போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.
Tags:    

Similar News