லைஃப்ஸ்டைல்
தியானம்

தியானம் செய்யும் போது கண்டிப்பாக கண்களை மூட வேண்டுமா?

Published On 2021-08-31 02:15 GMT   |   Update On 2021-08-31 02:15 GMT
கண்கள் என்பது ஐம்புலன்களில் மிகவும் முக்கியமான ஒரு உறுப்பு மேலும் கண்களை மூடுவதன் காரணமாக நாம் தியானத்தில் முழுமையாக ஈடுபடுவதற்கு பெரிதும் உதவி புரியும்.
தியானம் எவ்வாறு செய்ய வேண்டும் என்றால் கண்களை மூடிக் கொண்டு செய்ய வேண்டும்.

வேடிக்கையாக சொல்லவில்லை உண்மையாகவே ஆரம்பத்தில் தியானம் பழகுபவர்கள் கண்களை மூடிக்கொண்டு செய்ய வேண்டும் ஏன் என்றால், நமது ஐம்புலன்கள் இயல்பாகவே வெளிமுகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன அவற்றை நாம் உள் முகமாக திருப்ப வேண்டும்.

கண்கள் என்பது ஐம்புலன்களில் மிகவும் முக்கியமான ஒரு உறுப்பு மேலும் கண்களை மூடுவதன் காரணமாக நாம் தியானத்தில் முழுமையாக ஈடுபடுவதற்கு பெரிதும் உதவி புரியும்.

1. சம்மாணமிட்டு (அட்டணைக்காலிட்டு) உட்காரவும். ஒரு கால் மற்றதன் முன்னாலும், ஒன்றன் மேல் ஒன்றாக இல்லாமலும் இருக்க வேண்டும். இந்த நிலை அசௌகரிகமாக இருக்குமானால் அடி வயிற்றைக் கவனிக்க எது வசதியான நிலையோ அப்படி அமர்ந்து கொள்ளலாம்.

2. அமர்ந்திருக்கும்போது ஒரு கை மற்றதன் மேல் உள்ளங்கை மேற்புறமாக இருக்குமாறு மடியின் மீது வைத்திருக்க வேண்டும்.

3. முதுகை நேராக வைத்திருக்கவும். அசௌகரியமாக இருந்தால் முதுகு மிகவும் நேராக இருக்க வேண்டிய அவசியமில்லை; அடிவயிற்றின் அசைவு தெளிவாகத் தெரியும் எந்த உடல் நிலையிலும் இருக்கலாம்.

4. கண்களை மூடிக் கொள்ளுங்கள். நமது கவனம் வயிற்றின் மீது பதிந்திருப்பதால் கண்கள் திறந்திருந்தால் கவனம் திசை திருப்பப்பட்டு விடக் கூடும்.

5. மனக்கவனத்தை அடிவயிற்றில் பதிய வையுங்கள்; அடிவயிறு உயரும் போது இந்தத் தெளிவான எண்ணத்துக்கு இடம் கொடுங்கள்; மனதில் அமைதியாக, "உயர்கிறது" என்றும் அடிவயிறு தாழும் போது "தாழ்கிறது" என்றும் கூறிக் கொள்ளுங்கள். இந்தப் பயிற்சியை மனம் திசை திருப்பப்படும் வரை தொடர்ந்து செய்து கொண்டிருங்கள்.

இந்தத் தெளிவான, "உயர்கிறது" அல்லது "தாழ்கிறது" என்ற எண்ணம் அடிவயிற்றில் கவனம் செலுத்தும்போது மனதில் இருக்க வேண்டியது மிக முக்கியம். அடிவயிற்றோடு பேசுவது போலத் தோன்ற வேண்டும். முடிந்தால் இந்தப் பயிற்சியை ஐந்து அல்லது பத்து நிமிடங்களுக்குத் தொடரலாம்.
Tags:    

Similar News