பெண்கள் உலகம்
வீட்டு வேலைகளில் பெண்களுக்கு உதவும் ஆண்கள்

வீட்டு வேலைகளில் பெண்களுக்கு உதவும் ஆண்கள்

Published On 2022-02-07 08:27 GMT   |   Update On 2022-02-07 08:27 GMT
பெண்களின் முழுப்பொறுப்பாக இருந்த வீட்டு வேலைகளின் சுமை இப்போது ஆண்களால் பகிர்ந்து கொள்ளப்படுவதை இந்த ஆய்வு முடிவு வெளிப்படுத்துகிறது.
இந்தியாவில் கொரோனா தொற்றுநோய்க்கு பிறகு, 35 சதவீத ஆண்கள் வீட்டு வேலைகளில் அதிக நேரத்தை செலவிட தொடங்கியுள்ளனர் என்று சமீபத்திய சர்வே ஒன்று தெரிவிக்கிறது. இந்த மாற்றமானது பணியிடங்களில் பாலின சமநிலையை ஏற்படுத்துவதிலும் தாக்கத்தை உருவாக்கும் என்றும் குறிப்பிடுகிறது. இது தொடர்பாக ‘அவதார்’ என்னும் அமைப்பு நடத்திய ஆய்வில், 4 முதல் 5 மணி நேரம் வரை வீட்டு வேலை செய்யும் ஆண்களின் எண்ணிக்கை 22 சதவீதம் அதிகரித்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

அதிக எண்ணிக்கையிலான மக்கள் வீட்டை விட்டு வெளியே சென்று வேலை செய்வதும், வேலை மாற்றமும்தான் இந்த எண்ணிக்கை அதிகரிப்புக்கு காரணம் என்றும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது. பெண்களின் முழுப்பொறுப்பாக இருந்த வீட்டு வேலைகளின் சுமை இப்போது ஆண்களால் பகிர்ந்து கொள்ளப்படுவதை இந்த ஆய்வு முடிவு வெளிப்படுத்துகிறது.

இருப்பினும் 83 சதவீதம் பேர் வீட்டு வேலைகளிலும், தனது துணையுடனும் 2 முதல் 3 மணி நேரத்தை செலவிடுகின்றனர். துணை மற்றும் வீட்டு வேலை இரண்டுக்குமே சமமான நேரத்தை பகிர்ந்து கொள்கிறார்கள்.

‘‘கொரோனா தொற்று நம் அனைவரையும் பல்வேறு வழிகளில் பாதித்துள்ளது. எனினும் உடல் நலம் உள்பட பல விஷயங்களில் விழிப்புணர்வை அதிகரிக்கவும் உதவியது. அதே வேளையில் பெண்கள் பலர் தாங்கள் செய்து வந்த தொழிலை மீண்டும் தொடர்வது கடினமான விஷயமாக இருக்கிறது.

வேலை செய்வதற்காக வீட்டை விட்டு வெளியேறுவதற்கு பெண்கள் தயாராக இருக்கிறார்கள். தங்கள் உரிமையை கேட்டு பெறுவதற்கு தயங்கும் நிலை இல்லை’’ என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

அவதார் அறிக்கையின்படி, 31 சதவீத ஆண்கள் வேலையை சமமாக பகிர்ந்து கொள்கிறார்கள். அதுபோலவே 31 சதவீத ஆண்கள் வீட்டு வேலை சுமையை பகிர்ந்து கொள்வதை புகாராகவும் பதிவு செய்துள்ளனர். குழந்தை பெற்றெடுத்த தம்பதியரில் கிட்டத்தட்ட 91 சதவீதம் பேர் தங்கள் வீடுகளில் பாலினம் சார்ந்த பணிச்சுமை இல்லை என்றும் கூறியுள்ளனர்.
Tags:    

Similar News