இந்தியா
கொரோனா பலி

கேரளாவில் கொரோனா மரணம் 50 ஆயிரத்தை கடந்தது

Published On 2022-01-12 02:17 GMT   |   Update On 2022-01-12 02:17 GMT
கேரளாவில் தற்போது ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 790 பேர் கண்காணிப்பில் உள்ளனர். அவர்களில் 2 ஆயிரத்து 887 பேர் ஆஸ்பத்திரிகளிலும், மற்றவர்கள் வீட்டு கண்காணிப்பிலும் உள்ளனர்.
திருவனந்தபுரம் :

கேரளாவில் நேற்று 63 ஆயிரத்து 898 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டதில் 9 ஆயிரத்து 66 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியானது. முந்தைய தினம் அங்கு 5 ஆயிரத்து 797 பேருக்கு தொற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. இதுவரை 52 லட்சத்து 91 ஆயிரத்து 280 பேருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது.

கேரளாவில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை நேற்றுடன் 50 ஆயிரத்தை கடந்தது. நேற்று மட்டும் 296 பேர் பலியானார்கள். இவர்களையும் சேர்த்து இதுவரை 50 ஆயிரத்து 53 பேர் இறந்து உள்ளனர். திங்கட்கிழமை அன்று 2 ஆயிரத்து 64 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 790 பேர் கண்காணிப்பில் உள்ளனர். அவர்களில் 2 ஆயிரத்து 887 பேர் ஆஸ்பத்திரிகளிலும், மற்றவர்கள் வீட்டு கண்காணிப்பிலும் உள்ளனர்.

இந்த தகவல்களை கேரள சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
Tags:    

Similar News