ஆன்மிகம்
பல்லடம் அருகே காமாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு யாகம்

பல்லடம் அருகே காமாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு யாகம்

Published On 2021-06-18 05:37 GMT   |   Update On 2021-06-18 05:37 GMT
பல்லடம் அருகே கரைப்புதூரில் உள்ள காமாட்சியம்மன், மாகாளியம்மன் கோவிலில் கணபதி ஹோமம், அஸ்திர யாகம், மிருத்திங்க யாகம், ருத்தர யாகம், பாராயணம் ஆகியவை நடைபெற்றது.
பல்லடம் அருகே கரைப்புதூரில் உள்ள காமாட்சியம்மன், மாகாளியம்மன் கோவிலில் கிராம மக்கள் சார்பில் கொரோனா தொற்று ஒழிய வேண்டியும், உலக மக்கள் நலமுடன் வாழவேண்டியும் சிறப்பு யாகம் நடைபெற்றது. இந்த யாகத்தில் கணபதி ஹோமம், அஸ்திர யாகம், மிருத்திங்க யாகம், ருத்தர யாகம், பாராயணம் ஆகியவை நடைபெற்றது. இதில் பொதுமக்கள் யாரும் பங்கேற்கவில்லை.

மக்களின் பிரதிநிதியாக கோவில் திருப்பணிக்குழு தலைவர் உள்பட 4 பேர் மட்டும் கலந்துகொண்டனர். மற்ற கிராம மக்களுக்கு யாக வேள்வி தொடங்கியபோது செல்போன் மூலமாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரவர் வீட்டில் இருந்தவாறு பூஜை அறையில் சாமி படத்திற்கு மலர் மாலை அணிவித்து பொது மக்கள் காணொலி காட்சி மூலம் பிரார்த்தனை செய்தனர். யாக வேள்வி நிறைவடைந்த பின்னர் அம்மனுக்கு அபிசேக ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் கோவில் பிரசாதத்தை நிர்வாகிகள் வீடு, வீடாக சென்று மக்களுக்கு வழங்கினர்.
Tags:    

Similar News