செய்திகள்
கோப்புபடம்

திருப்பூர் மாநகரில் மாஸ் கிளீனிங்

Published On 2021-07-31 08:43 GMT   |   Update On 2021-07-31 08:43 GMT
அனைத்து மண்டலங்களிலும் ஒவ்வொரு வார்டிலும் ஒவ்வொரு நாள் ‘மாஸ் கிளீனிங்’ பணி மேற்கொள்ளப்படுகிறது.
திருப்பூர்:

திருப்பூர் மாநகராட்சியில் 60 வார்டுகள் உள்ளன. இங்கு வீடுகள், கடைகள், தொழிற்சாலைகள் உள்ளிட்டவற்றில் இருந்து தினமும் 500 மெட்ரிக் டன் குப்பை சேகரமாகிறது. 3 ஆயிரம்  தூய்மை பணியாளர்கள் உள்ளனர்.

நகரில் தினமும் குப்பைகள் அகற்றுவது பெரும் சவாலானதாக உள்ளது. இதற்காக அனைத்து பகுதியிலும் தினமும் ‘மாஸ் கிளீனிங்’ நடைமுறையை மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் அறிமுகப்படுத்தியுள்ளார்.

காலை முதல்பிற்பகல் வரை தங்கள் வார்டு பகுதியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் பிற்பகலுக்கு மேல் வார்டு வாரியாக ஒரு பகுதியில் ஒட்டுமொத்த தூய்மைபணி மேற்கொள்ளும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

அனைத்து மண்டலங்களிலும் ஒவ்வொரு வார்டிலும் ஒவ்வொரு நாள் ‘மாஸ் கிளீனிங்’ பணி மேற்கொள்ளப்படுகிறது. இதுகுறித்து தினமும் பட்டியல் தயாரித்து பகுதி வாரியாக சுகாதார ஆய்வாளர் மற்றும் மேற்பார்வையாளர் முன்னிலையில் இப்பணி மேற்கொள்ளப்படுகிறது.
Tags:    

Similar News