செய்திகள்
மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி

முதல்-மந்திரியாக ‘வங்காளம் தனது சொந்த மகளையே விரும்புகிறது’ - திரிணாமுல் காங்கிரசின் தேர்தல் முழக்கம் வெளியீடு

Published On 2021-02-20 21:58 GMT   |   Update On 2021-02-20 21:58 GMT
மம்தாவே மீண்டும் முதல்-மந்திரியாவார் என்பதை வலியுறுத்தும் வகையிலும் ‘வங்காளம் தனது சொந்த மகளையே விரும்புகிறது’ என்ற முழக்கத்தை திரிணாமுல் காங்கிரசார் நேற்று வெளியிட்டனர்.
கொல்கத்தா:

மேற்கு வங்காளத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. அங்கு ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மும்முரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், பா.ஜனதாவும் ஏற்கனவே தேர்தல் வேலைகளை தொடங்கி விட்டது.

இந்த தேர்தல் களத்தில் திரிணாமுல் காங்கிரசுக்கும், பா.ஜனதாவுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நடந்து வருகிறது. குறிப்பாக பா.ஜனதாவுக்காக மாநிலத்தை சேராத தலைவர்கள் தேர்தல் சுற்றுலா வருவதாக திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது.

இதை அடிப்படையாக கொண்டும், தற்போதைய முதல்-மந்திரி மம்தாவே மீண்டும் முதல்-மந்திரியாவார் என்பதை வலியுறுத்தும் வகையிலும் அந்த கட்சி தேர்தல் முழக்கத்தையும் உருவாக்கி இருக்கிறது.

அந்தவகையில் ‘வங்காளம் தனது சொந்த மகளையே விரும்புகிறது’ என்ற முழக்கத்தை திரிணாமுல் காங்கிரசார் நேற்று வெளியிட்டனர்.

இது குறித்து கட்சியின் பொதுச்செயலாளர் பார்த்தா சட்டர்ஜி கூறுகையில், ‘பல ஆண்டுகளாக தங்களுடனேயே முதல்-மந்திரியாக இருந்த தங்கள் சொந்த மகளையே மாநில மக்கள் மீண்டும் முதல்-மந்திரியாக்க வேண்டும் என விரும்புகின்றனர். வங்காளத்தின் தேவைக்காக வெளியாட்களை அழைக்க நாங்கள் விரும்பவில்லை’ என்று தெரிவித்தார்.
Tags:    

Similar News