செய்திகள்
பட்டாசுகள்

டெல்லியில் பட்டாசுகளுக்கு முற்றிலும் தடை- கெஜ்ரிவால் அரசு அதிரடி

Published On 2021-09-16 03:34 GMT   |   Update On 2021-09-16 03:34 GMT
டெல்லி அரசு பட்டாசுகளுக்கு தடை விதித்துள்ளதால் தமிழகத்தின் சிவகாசி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பட்டாசு தொழிலாளர்கள் பெரும் நெருக்கடிக்கு தள்ளப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
புதுடெல்லி:

தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு பெரும் பிரச்சினையாக மாறி வருகிறது. டெல்லியை சுற்றியுள்ள மாநிலங்களில் வேளாண் கழிவுகளை விவசாயிகள் எரிப்பதால் அடிக்கடி தலைநகரில் காற்று மாசுபாடு ஏற்படுவது வழக்கமாகி வருகிறது. இதைப்போல பண்டிகை நாட்களில் வெடிக்கப்படும் பட்டாசுகளும் தலைநகரின் காற்றின் தூய்மைக்கு பங்கம் விளைவிக்கின்றன. இதனால் டெல்லியில் காற்று தூய்மையை உறுதி செய்ய மாநில அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதன் தொடர்ச்சியாக தீபாவளி பண்டிகையையொட்டி மாநிலத்தில் பட்டாசுகளுக்கும் தடை விதித்து நேற்று அவர் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், ‘தலைநகரில் கடந்த 3 ஆண்டுகளாக தீபாவளி காலங்களில் ஏற்பட்டு வரும் காற்று மாசுபாட்டை கருத்தில் கொண்டு, கடந்த ஆண்டைப்போல இந்த ஆண்டும் பட்டாசுகளுக்கு முழுவதுமான தடை விதிக்கப்படுகிறது. அதன்படி அனைத்து விதமான பட்டாசுகளும் சேமித்தல், விற்பனை, பயன்பாடு போன்றவற்றுக்கு தடை விதிக்கப்படுகிறது’ என்று குறிப்பிட்டு இருந்தார். டெல்லி அரசின் இந்த தடையால் தமிழகத்தின் சிவகாசி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பட்டாசு தொழிலாளர்கள் பெரும் நெருக்கடிக்கு தள்ளப்படும் சூழல் ஏற்பட்டு உள்ளது.
Tags:    

Similar News