தொழில்நுட்பம்

அதிரடி சலுகைகளுடன் ஒன்பிளஸ் 7 ப்ரோ விற்பனை துவக்கம்

Published On 2019-05-18 12:27 GMT   |   Update On 2019-05-18 12:27 GMT
ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் 7 ப்ரோ இந்திய விற்பனை துவங்கியுள்ளது.



இந்தியாவில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனை அமேசான் பிரைம் வாடிக்கையாளர்களுக்கு துவங்கி தற்சமயம் அனைவருக்கம் விற்பனை செய்யப்படுகிறது.

ஒன்பிளஸ் 7 ப்ரோ இந்தியாவில் மூன்று வித வேரியண்ட்களில் கிடைக்கிறது. 6 ஜிபி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ.48,999, 8 ஜிபி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ.52,999 என்றும் டாப் எண்ட் 12 ஜிபி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ.57,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தற்சமயம் ஒன்பிளஸ் 7 ப்ரோ மிரர் கிரே வேரியண்ட் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இதன் நெபுளா புளு வேரியண்ட் விற்பனை மே 28 ஆம் தேதி துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் 7 ப்ரோ ஆல்மண்ட் நிற வேரியண்ட் ஜூன் மாத வாக்கில் விற்பனை செய்யப்படுகிறது.



ஒன்பிளஸ் 7 ப்ரோ அறிமுக சலுகைகள்:

ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் வாங்கும் ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ரூ.9300 மதிப்புள்ள சலுகைகள் வழங்கப்படுகின்றன. இதில் ரூ.5,400 மைஜியோ செயலியில் கேஷ்பேக் வவுச்சர்கள் வடிவில் வழங்கப்படுகின்றன. மீதமுள்ள ரூ.3,900 தொகை ரூ.2000 மதிப்புள்ள தள்ளுபடி அல்லது சூம்கார் சேவையை பயன்படுத்தும் போது 20 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதேபோன்று விமான பயணச்சீட்டுக்கள் மற்றும் தங்கும் விடுதி முன்பதிவுகளுக்கு ரூ.1,550 தள்ளுபடி வழங்கப்படுகிறது. 



ஒன்பிளஸ் 7 ப்ரோ சிறப்பம்சங்கள்:

- 6.67 இன்ச் 3120x1440 பிக்சல் குவாட் ஹெச்.டி. + 19.5:9 ஃபிளுயிட் AMOLED டிஸ்ப்ளே
- 3D கார்னிங் கொரில்லா கிளாஸ்
- ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 855 7என்.எம். பிராசஸர்
- அட்ரினோ 640 GPU
- 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி
- 8 ஜி.பி. / 12 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. / 256 ஜி.பி. மெமரி
- ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் ஆக்சிஜன் ஓ.எஸ். 9.5
- டூயல் சிம் ஸ்லாட்
- 48 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.6, 1/2.25″ சோனி IMX586, 0.8μm பிக்சல், OIS, EIS
- 8 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், f/2.4, 1.0 μm பிக்சல், OIS
- 16 எம்.பி. 117° அல்ட்ரா-வைடு ஆங்கிள் லென்ஸ், f/2.2
- 16 எம்.பி. செல்ஃபி கேமரா, சோனி IMX471, f/2.0, 1.0μm பிக்சல்
- இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- யு.எஸ்.பி. டைப்-சி, டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர், டால்பி அட்மோஸ்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- யு.எஸ்.பி. டைப்-சி
- 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- ராப் சார்ஜ் 30 ஃபாஸ்ட் சார்ஜ்
Tags:    

Similar News