செய்திகள்
கோப்புப்படம்.

பழைய ஆம்புலன்ஸ்களால் நோயாளிகளை மீட்பதில் சிக்கல்

Published On 2021-07-16 08:52 GMT   |   Update On 2021-07-16 08:52 GMT
புதிய ஆம்புலன்ஸ் வருமென எதிர்பார்த்திருந்த டிரைவர் மற்றும் டெக்னீசியனுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் 30 இடங்களில் இருந்து ‘108 ஆம்புலன்ஸ்’கள் இயங்கிய நிலையில் அவிநாசி, பெருமாநல்லூர், சின்னக்கரை, காங்கயம் பகுதியில் இருந்த ஆம்புலன்ஸ்கள்3  லட்சம் கி.மீ., ஓடியதாக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இப்பகுதிக்கு புதிய ஆம்புலன்ஸ் வருமென மாவட்ட அலுவலர்கள் தெரிவித்தனர்.தற்காலிகமாக  ஒரு வாரமாக வேறு பகுதியில் இருந்து ஆம்புலன்ஸ்கள் அனுப்பி வைக்கப்பட்டது.பழைய ஆம்புலன்ஸ்களே அனுப்பி  வைக்கப்படுகிறது.

இதனால் புதிய ஆம்புலன்ஸ் வருமென எதிர்பார்த்திருந்த டிரைவர் மற்றும் டெக்னீசியனுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

அவர்கள் கூறுகையில்,ஆம்புலன்ஸ் திரும்ப பெறப்பட்ட காங்கயம், அவிநாசி, பெருமாநல்லூர் ஆகிய மூன்று பகுதியில் அதிகளவில் விபத்து நடக்கிறது.

குறிப்பாக தேசிய நெடுஞ்சாலையில் அருகில் இருப்பதால் உயிருக்கு போராடும் ஒருவரை மீட்டெடுக்க 40 முதல் 60 கி.மீ., அதிவேகத்தில் பயணிக்க வேண்டும்.இதனால் தான் இங்கு நிறுத்தப்பட்ட வாகனங்கள் விரைவாக நான்கு லட்சம் கி.மீ., ஓடியது.

இந்த இடங்களுக்கு புதிய வாகனங்களை அனுப்பாமல் பழைய ஆம்புலன்ஸ்களை அனுப்பி உள்ளதால் விரைந்து சென்று நோயாளிகளை மீட்பதில் சிக்கல் ஏற்படும்.

இவ்விஷயத்தை பரிசீலித்து  வாகனங்களை உடனடியாக மாற்றி புதிய வாகனம்  வரவழைக்க  வேண்டும் என்றனர்.
Tags:    

Similar News