ஆன்மிகம்
சமயபுரம் செல்லாண்டி அம்மன் கோவில் மாசித்திருவிழா

சமயபுரம் செல்லாண்டி அம்மன் கோவில் மாசித்திருவிழா

Published On 2021-03-05 06:48 GMT   |   Update On 2021-03-05 06:48 GMT
சமயபுரம் செல்லாண்டி அம்மன் கோவில் மாசித்திருவிழாவில் பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றும் பொருட்டு கிடாவெட்டியும், பொங்கல் வைத்தும் அம்மனை பயபக்தியுடன் வழிபட்டனர்.
சமயபுரம் மாரியம்மன் கோவிலின் உபகோவிலாக விளங்குவது செல்லாண்டி அம்மன் கோவிலாகும். இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசிமாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி மாசி மாத திருவிழா நேற்று காலை நடைபெற்றது.

முன்னதாக செல்லாண்டி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கேடயத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து ஒவ்வொரு தெரு வழியாக சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றும் பொருட்டு கிடாவெட்டியும், பொங்கல் வைத்தும் அம்மனை பயபக்தியுடன் வழிபட்டனர்.

மாலை அம்மன் கோவிலை சென்றடைந்தார். தொடர்ந்து மஞ்சள் நீராட்டு விழாவும், அதைத்தொடர்ந்து சாமி குடிபுகுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை சமயபுரம் மாரியம்மன் கோவில் இணை ஆணையர் கல்யாணி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News