லைஃப்ஸ்டைல்
பெண்களே தனிமையை வெல்வது சுலபமே

பெண்களே தனிமையை வெல்வது சுலபமே

Published On 2021-05-13 07:36 GMT   |   Update On 2021-05-13 07:36 GMT
தனிமை என்பது தன்னை பற்றிய சுய மதிப்பீட்டை தீர்மானம் செய்யும் சந்தர்ப்பத்தை ஒருவருக்கு அளிக்கிறது. அதன் மூலம் தனக்கு எது தேவை, எது தேவையில்லை என்பதை அறிந்து கொள்ளவும் உதவுகிறது.
தனிமை என்பது தன்னை பற்றிய சுயமதிப்பீட்டை தீர்மானம் செய்யும் சந்தர்ப்பத்தை ஒருவருக்கு அளிக்கிறது. அதன் மூலம் தனக்கு எது தேவை, எது தேவையில்லை என்பதை அறிந்து கொள்ளவும் உதவுகிறது. இனிமையான தனிமை என்பது ரசிப்பதற்குரியதாக இருப்பினும் பலருக்கு அது கொடிய நோயாக மாறி விடக்கூடிய அபாயமும் உள்ளது.

இன்றைய காலகட்ட பெண்கள் பலரையும் பாதிக்கும் விஷயமாக தனிமை மாறி வருகிறது. கணவன், குழந்தைகளுக்காக காலை முதல் இரவு வரை பம்பரமாய் சூழலும் இல்லத்தரசிகள் இதில் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். தனிமையை உணர்வதால் அவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் காரணமாக உடல் பருமன், ரத்த ழுததம், மனச்சோர்வு உள்ளிட்ட பல பிரச்சனைகளால் ஆயுட்காலம் குறைவதாகவும் ஆய்வுகளில் தெரியவந்ததுள்ளது.

தனிமையை வெல்லும் வழி என்று நினைத்து இல்லததரசிகள் பலரும் டிவி, மொபைல், பேஸ்புன் வாட்ஸ்அப் ஆகியவற்றில் பலமணிநேரத்தை செலவிடுகின்றனர். அதன் காரணமாக புறச்சூழலை அறிய இயலாத மனநோயாளிகளாக தங்களை அறியாமல் மாறி விடுகின்றனர். சிறிது முயற்சி செய்தால் தனிமையை கடந்து வாழ்க்கையை வென்றெடுக்கலாம். அதற்கான சில வழிகள்...

கணவன் குழந்தைகளுக்கு பிடிக்கும் என ஆர்வத்துடன் விதவிதமான புதுமையான உணவுகள் தயாரிப்பவர்கள் அவற்றை வீடியோவாக சமூக வலைத்தளங்களில் பதிவிடலாம். அதுமட்டுமின்றி, வீட்டை அலங்கரித்து சமையல் குறிப்புகள் போன்றவற்றை பதிவிடலாம்.

கல்வித்தகுதி குறைவாக உள்ள குடும்பத்தலைவிகளுக்கு அரசு சார்பில் உதவித் தொகையுடன் இலவச வேலை வாய்ப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. அவற்றை பெற்று வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொண்டும் தனிமை உணர்வை தவிர்க்கலாம்.

பட்டப்படிப்பு முடிந்த இல்லத்தரசிகளுக்கு குடும்ப நிர்வாகத்திலேயே காலம் கழிவது ஒருவிதமான தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தக்கூடும். அனால் கிடைக்கும் நேரத்தில் அடிப்படை கம்யூட்ட்ர் பயிற்சி உள்ளிட்ட தொழில் நுட்ப பயிற்சிகளை பெற்று வீட்டிலிருந்தே திறமைகேற்ப பணிகளை செய்து வருமானம் ஈட்டலாம்.

தொலைக்காட்சி மற்றும் மொபைல்போன் ஆகியவற்றில் செலவழிக்கும் காலத்தை குறைத்து ஆர்வம் மற்றும் திறமைக்கேற்ப சிறிய கைவினைப்பொருட்களை தயார் செய்து அவற்றை ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய முயற்சிக்கலாம்.

தையல் கலையில் விருப்பம் உள்ளவர்கள், அடிப்படை தையல் பயிற்சி, எம்பிராய்டரி, புடவைகளுக்கு குஞ்சம் வைப்பது போன்றவற்றை
கற்றுக்கொள்ளலாம். வீட்டில் இருந்தபடியே இணையம் மூலமாக நடக்கும் ஆன்லைன் தையல்கலை பயிற்சி வகுப்புகளில் பங்கேற்பதன் மூலம் இல்லத்தரசிகள் தங்களது திறமைகளை வளர்த்துக்கொண்டு வருமானம் ஈட்ட முடியும்.

தனிமை உணர்வு மனதை ஆக்கிரமித்து விட அனுமதிக்காமல் புதிய விஷயங்களை கற்று கொண்டு அவற்றை பயனுள்ளதாக மாற்றி கொண்டால் வாழ்க்கையில் சிகரத்தை அடையலாம்.
Tags:    

Similar News