செய்திகள்
டிடிவி தினகரன்

அண்ணா பிறந்தநாளில் திருவண்ணாமலையில் டி.டி.வி. தினகரன் மரியாதை

Published On 2021-09-09 04:57 GMT   |   Update On 2021-09-09 04:57 GMT
பேரறிஞர் அண்ணாவின் 113-வது பிறந்தநாளை முன்னிட்டு டி.டி.வி. தினகரன் வருகின்ற 15-ந்தேதி திருவண்ணாமலை, அண்ணாசாலையில் அமைந்துள்ள அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
சென்னை:

அ.ம.மு.க. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

பேரறிஞர் அண்ணாவின் 113-வது பிறந்தநாளை முன்னிட்டு அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வருகின்ற 15-ந்தேதி காலை 10 மணியளவில் திருவண்ணாமலை, அண்ணாசாலையில் அமைந்துள்ள அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

இதில் பங்கேற்கும் அனைவரும் கொரோனா கால வழிமுறைகளை பின்பற்றி முககவசம் அணிந்து போதிய சமூக இடைவெளியுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News