செய்திகள்
முதலமைச்சர் ரங்கசாமி

மஞ்சள் நிற குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.5 ஆயிரம் வெள்ள நிவாரணம் - ரங்கசாமி அறிவிப்பு

Published On 2021-11-22 18:00 GMT   |   Update On 2021-11-22 18:00 GMT
மஞ்சள் நிற குடும்ப அட்டைதாரர்களுக்கும் மழை வெள்ள நிவாரணமாக ரூ.5000 வழங்கவேண்டும் என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கோரிக்கை விடுத்திருந்தார்.
புதுச்சேரி:

வங்கக் கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம், புதுச்சேரியில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் நகர சாலைகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும் மழை தண்ணீர் தேங்கி வெள்ளக்காடானது.

புதுச்சேரியில் வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு பல்வேறு பகுதிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.  இதனால் வீடுகள், குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்து உள்ளன.

இதற்கிடையே, புதுச்சேரியில் அனைத்து சிவப்பு கார்டுதாரர்களுக்கும் வெள்ள நிவாரண தொகையாக ரூ.5000 வழங்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், தற்போது அனைத்து மஞ்சள் கார்டுதாரர்களுக்கும் நிவாரணம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, புதுச்சேரியில் மஞ்சள் நிற குடும்ப அட்டைதாரர்களுக்கும் மழை வெள்ள நிவாரணமாக ரூ.5000 வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே அமைப்புசாரா தொழிலாளர்கள், கட்டுமான தொழிலாளர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது
குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News