ஆன்மிகம்
ஆழித்தேர்

அசைந்தாடும் ஆழித்தேரின் அதிசயங்கள்

Published On 2021-10-03 02:30 GMT   |   Update On 2021-10-01 08:03 GMT
திருவாரூர் தேரை ‘ஆழித்தேர்’ என்று வர்ணிப்பார்கள். தேரை இழுக்க 4 வடங்கள் பொருத்தப்படும். இவை ஒவ்வொன்றும் 425 அடி நீளம் கொண்டவை. கயிற்றின் சுற்றளவு 21 அங்குலம் ஆகும்.
* எண்கோண வடிவில் அமைந்த இந்த ஆழித்தேர், 4 நிலைகளையும், 7 அடுக்குகளையும் கொண்டது.

* தேரை இழுத்துச் செல்வது போல அமைந்த 4 குதிரைகள், 32 அடி நீளமும், 11 அடி அகலமும் கொண்டவை.

* தேரை இழுக்க 4 வடங்கள் பொருத்தப்படும். இவை ஒவ்வொன்றும் 425 அடி நீளம் கொண்டவை. கயிற்றின் சுற்றளவு 21 அங்குலம் ஆகும்.

‘திருவாரூர் தேரழகு’ என்பது சொல் வழக்கு. ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் இது.

* ‘ஆழித்தேர் வித்தகனை நான் கண்டது ஆரூரே..’ என்ற திருநாவுக்கரசரின் பதிகம் மூலம், கி.பி. 5-ம் நூற்றாண்டு காலத்திலேயே திருவாரூர் தேர் இருந்திருக்கிறது என்பது புலனாகிறது.

* திருவாரூர் தேரை ‘ஆழித்தேர்’ என்று வர்ணிப்பார்கள். கடல் போன்று பரந்து விரிந்தது என்பதால் இந்தப் பெயர் வந்தது.

* அலங்கரிக்கப்படாத தேரின் உயரம் 30 அடி. விமானம் வரையான தேர்ச்சீலை அலங்காரப் பகுதியின் உயரம் 48 அடி, விமானம் 12 அடி, தேர் கலசம் 6 அடி என முழுமையான அலங்காரத்துடன் திகழும் ஆழித்தேரின் உயரம் 96 அடி.

* தேர் அலங்காரத்திற்காக 5 டன் பனஞ்சப்பைகள், 50 டன் மூங்கில், 10 டன் சவுக்கு கம்புகள், ஒரு டன் கயிறு, ½ டன் துணிகள் மற்றும் சிறுசிறு பொம்மைகள் பயன்படுத்தப்படுகின்றன.

* அலங்கரிக்கப்படாத நிலையில் தேரின் எடை 220 டன். அலங்கரிப்பட்டதும், அதனை எடை 350 டன்னை எட்டிவிடும்.
Tags:    

Similar News