ஆன்மிகம்
மந்தமாரியம்மன்‌ கோவில் திருவிழா

பிலிக்கல்பாளையம் அருகே மந்தமாரியம்மன்‌ கோவில் திருவிழா

Published On 2021-02-04 08:11 GMT   |   Update On 2021-02-04 08:11 GMT
கபிலர்மலை ஒன்றியம் பிலிக்கல்பாளையம் அருகே சாமிநாதபுரத்தில் உள்ள மந்தமாரியம்மன் கோவில் திருவிழாவை ‌முன்னிட்டு பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி தீர்த்த குடங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து ஊர்வலமாக புறப்பட்டு ‌கோவிலை வந்தடைந்தனர்.
கபிலர்மலை ஒன்றியம் பிலிக்கல்பாளையம் அருகே சாமிநாதபுரத்தில் உள்ள மந்தமாரியம்மன் கோவில் திருவிழா‌ ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் நடைபெறுவது வழக்கம். அதே போல் இந்த ஆண்டும் மந்தமாரியம்மன் கோவில் ‌திருவிழா கடந்த மாதம் 29-ந் தேதி தொடங்கியது. திருவிழாவை ‌முன்னிட்டு பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி தீர்த்த குடங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து ஊர்வலமாக புறப்பட்டு ‌கோவிலை வந்தடைந்தனர். பின்னர் அம்மனுக்கு பூச்சாட்டுதல் நிகழ்ச்சியும், அதனைத்தொடர்ந்து கம்பம் நடும் ‌நிகழ்ச்சியும் நடைபெற்றது.

கடந்த 30 மற்றும் 31-ந் தேதி‌ அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் ‌நடந்தது. கடந்த திங்கட்கிழமை மாலை வடிசோறு நிகழ்ச்சியும், செவ்வாய்க்கிழமை மாலை கோவில் வளாகத்தில் மாவிளக்கு பூஜையும், இரவு வாணவேடிக்கையும் நடைபெற்றது. நேற்று காலை கிடா வெட்டுதலும், மாலை மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும், இரவு அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை மந்த‌மாரியம்மன் கோயில் விழாக்குழுவினர் ‌மற்றும்‌ ஊர்‌ பொதுமக்கள் ‌ செய்திருந்தனர்.
Tags:    

Similar News